ஆசிரியர்கள் போராட்டம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
தேனி: மதுரையில் கல்லுாரிக் கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன் அரசு கலைக் கல்லுாரி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர்.தேனி மாவட்டம் கோட்டூர் அரசு கலைக் கல்லுாரியில் கவுரவ விரிவு ரையாளர்கள் சிலருக்கு 19 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து உயர்கல்வி செயலாளர் மற்றும் அமைச்சருக்கு மனுக்கள் அனுப்பியும்

தேனி: மதுரையில் கல்லுாரிக் கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன் அரசு கலைக் கல்லுாரி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டம் கோட்டூர் அரசு கலைக் கல்லுாரியில் கவுரவ விரிவு ரையாளர்கள் சிலருக்கு 19 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து உயர்கல்வி செயலாளர் மற்றும் அமைச்சருக்கு மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை இல்லை.இதை கண்டித்து பாதிக்கப்பட்ட விரிவுரையாளர்கள் இணை இயக்குனர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேல்முருகன் கூறுகையில், “ஆண்டிபட்டி அரசு கல்லுாரியில் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. கோட்டூரில் மட்டும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இணை இயக்குனரிடமும் 6 முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை” என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X