அரசியல் செய்தி

தமிழ்நாடு

நிபந்தனைகள் இன்றி கடன் அனுமதிக்க தமிழகம் கோரிக்கை

Added : நவ 17, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை : 'நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள் நிபந்தனைகள் ஏதுமின்றி, மாநிலங்கள் கடன் பெற அனுமதிக்க வேண்டும்' என, தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.நாட்டின் தொழில் முதலீடு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து, மாநில முதல்வர்கள் மற்றும் நிதி அமைச்சர்களுடன், மத்திய நிதி

சென்னை : 'நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள் நிபந்தனைகள் ஏதுமின்றி, மாநிலங்கள் கடன் பெற அனுமதிக்க வேண்டும்' என, தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
நாட்டின் தொழில் முதலீடு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து, மாநில முதல்வர்கள் மற்றும் நிதி அமைச்சர்களுடன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று முன்தினம், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக ஆலோசனை நடத்தினார்.

தமிழக அரசு சார்பில், நிதி அமைச்சர் தியாகராஜன் பேசியதாவது:
சில மத்திய சட்டங்களின் கீழ் அனுமதி பெறுவதற்கான காலவரம்பை, நான்கு மாதங்களில் இருந்து ஒரு மாதமாக குறைக்க வேண்டும். மருத்துவ சாதனங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை விரைவுபடுத்த வேண்டும்.சென்னை, கோவை, திருச்சி, துாத்துக்குடி விமான நிலையங்களை விரிவுப்படுத்துவதில் உள்ள சிக்கல்களுக்கு, தீர்வு காண வேண்டும்.
மதுரை விமான நிலையத்தை விரிவுப்படுத்த, நிலம் கையகப்படுத்தப்பட்டு, இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு ஒப்படைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.அப்பகுதியில் கூடுதல் வர்த்தகம் மற்றும் விமானப் போக்குவரத்தை மேம்படுத்த, மதுரை விமான நிலையத்தை, விரைவில் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும்.
துாத்துக்குடி துறைமுகத்தை விரிவுப்படுத்தும் திட்டத்தை, விரைவில் செயல்படுத்த வேண்டும். கொரானாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான, ஒரு விரிவான தொகுப்பினை, மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.சென்னை - கன்னியாகுமரி சாலை முழுதையும், எட்டு வழிச்சாலையாக மேம்படுத்த வேண்டும்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம், நிலுவையில் உள்ள 11 நெடுஞ்சாலைத் திட்டங்களை, விரைந்து நிறைவேறற வேண்டும்.கடலில் காற்றாலை மின் உற்பத்தி மேம்பாட்டுக் கொள்கையை, மத்திய அரசு உருவாக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள், நிபந்தனைகள் எதுவுமின்றி மாநிலங்கள் கடன் பெற அனுமதிக்கப்பட வேண்டும். கூடுதல் முதலீடுகளை மேற்கொள்ளும் திறன் அடிப்படையில், வரம்புகள் தீர்மானிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
17-நவ-202120:30:59 IST Report Abuse
RajanRajan நிபந்தனைகள் இன்றி கடன் அனுமதிக்க தமிழகம் கோரிக்கை...டக்லஸ். பாருடா திராவிட விடியல் எப்படி போடுறான் அருவாளைன்னு. தரித்திரியாசிகள். இவனுங்க முவதிலே முழிக்க கூடாது.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
17-நவ-202120:27:45 IST Report Abuse
RajanRajan 'நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள் நிபந்தனைகள் ஏதுமின்றி, மாநிலங்கள் கடன் பெற அனுமதிக்க வேண்டும்' என, தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அட பாவிகளா. மக்களின் ஒட்டு வாங்கி ஆட்சி அதிகாரம் மமதையோடு இரு திராவிட கட்சிகளும் சேர்ந்து கடன் வாங்கி தனிநபர் கடனை மறைமுகமாக 2 லக்ஷம் + என ஏற்றிவிட்டீர்கள் உங்கள் நிர்வாக சீர்கேட்டின் மூலம். இன்னிக்கு வரை உருப்படியாக ஒரு திட்டமும் லஞ்சம் வாங்காமல் ஊழல் பண்ணாமல் நிறைவேற்றும் தகுதியே உங்களில் எவனுக்கும் கிடையாது. எனவே மத்திய அரசு ஒரு போதும் இந்த தரித்ரியம் புடிச்ச திவாலான வசூல் ராஜா கூட்டத்தை கடன் வாங்க அனுமதிக்கவே கூடாது. கடன் வாங்கியும் அதில் ஆட்டைய போட்டுக்க இவனுங்க துடிக்கிறானுங்க என்பது இதிலிருந்து நல்ல தெரியுது. இந்த கூட்டம் மாநிலத்தையும் மக்களையும் சீரழிக்கும் முயற்சியில் களமிறங்கிட்டானுங்க என்பதே நிதர்சனமான உண்மை. எனவே மகா திராவிட ஆத்மாக்களே நீங்க ஒரு திட்டமும் கட்டமும் போட வேண்டாம் இப்போ இருக்கிறமாதிரி வரவும் செலவும் கரிக்கடா பண்ணி மிச்சம் மீதி காலத்தை ஓட்டினால் மட்டும் போதும். இனியும் உங்க சாதனை பட்டியல் துண்டு சீட்டை காட்டி மக்களை ஏமாற்றாதீர்கள். குரானா போல வரும் காலத்தின் கோரா முகம் உங்களை எல்லாம் விட்டு வைக்காது என்பதை முதலில் உணருங்கள். ஜெய் ஸ்ரீராம். ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X