கோவா முதல்வர் வேட்பாளர்? லியாண்டர் பேச்சால் பரபரப்பு!

Updated : நவ 17, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி:''கோவா முதல்வராக பொறுப்பேற்றால், கோவா மக்களுக்கு பொற்கால ஆட்சி தருவேன்,'' என, முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் தெரிவித்தார்.கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடக்க உள்ளது. இந்நிலையில் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
Leander Paes, TMC, Goa, CM Candidate, லியாண்டர் பயஸ், திரிணமுல் காங்கிரஸ், கோவா, முதல்வர் வேட்பாளர்

புதுடில்லி:''கோவா முதல்வராக பொறுப்பேற்றால், கோவா மக்களுக்கு பொற்கால ஆட்சி தருவேன்,'' என, முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் தெரிவித்தார்.

கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடக்க உள்ளது. இந்நிலையில் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில், திரிணமுல் காங்.,கில் சமீபத்தில் இணைந்தார். தற்போது கோவாவில் மக்களை நேரடியாக சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நம் நாட்டுக்காக 30 ஆண்டுகள் உழைத்துள்ளேன். இப்போது களம் மட்டுமே மாறியுள்ளது.


latest tamil news


டென்னிஸ் கோர்ட்டில் இருந்து மக்களின் கோர்ட்டுக்கு இடம் மாறியுள்ளேன்; உழைப்பு தொடர்கிறது. மாநிலம் சந்தித்து வரும் பிரச்னைகளை மக்களிடம் கேட்டறிந்து வருகிறேன். தேர்தலில் போட்டியிட 'சீட்' வழங்கப்பட்டால் மிகப்பெரிய கவுரவமாக கருதுவேன். முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டால், மூத்த தலைவர்களின் ஆலோசனைகளை பெற்று பொறுப்புடன் ஆட்சி நடத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.இந்த பேட்டியால், கோவா தேர்தலில், திரிணமுல் கட்சியின் முதல்வர் வேட்பாளராக லியாண்டர் பயஸ் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-நவ-202118:13:45 IST Report Abuse
முருகன் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
17-நவ-202117:06:14 IST Report Abuse
INDIAN Kumar இத்தாலி காங் கட்சியை வீழ்த்த வருகிறது தீதி யின் காங்கிரஸ் கட்சி
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
17-நவ-202116:46:27 IST Report Abuse
Anand இவிங்க முகத்தையும் விரலை காட்டும் விதமும் பார்த்தால் அடக்கமுடியாமல் இருப்பது போல.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X