பொது செய்தி

தமிழ்நாடு

ரோலர் ஸ்கேட்டிங்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஆனந்த்வேல்குமாருக்கு வரவேற்பு

Updated : நவ 17, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை : கொலம்பியாவில் நடந்த ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியில், ஜூனியர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று சென்னை திரும்பிய, தமிழக வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.கொலம்பியா நாட்டில் சமீபத்தில் நடந்த, ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியில், ஜூனியர் பிரிவில், சென்னையை சேர்ந்த ஆனந்த்வேல்குமார் வெள்ளி பதக்கம் வென்றார். நேற்று அவர் சென்னை

சென்னை : கொலம்பியாவில் நடந்த ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியில், ஜூனியர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று சென்னை திரும்பிய, தமிழக வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



latest tamil news



கொலம்பியா நாட்டில் சமீபத்தில் நடந்த, ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியில், ஜூனியர் பிரிவில், சென்னையை சேர்ந்த ஆனந்த்வேல்குமார் வெள்ளி பதக்கம் வென்றார். நேற்று அவர் சென்னை திரும்பினார். அவருடன் பல்வேறு பிரிவு போட்டிகளில் பங்கேற்ற வீரர் மற்றும் வீராங்கனைகள் வந்தனர்.


latest tamil news



சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பில், வீரர், வீராங்கனைகளுக்கு, பூச்செண்டு, பொன்னாடை அளித்து, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணை மேலாளர் சாமுவேல்ராஜா டேனியல், முதுநிலை மேலாளர் மெர்சி ரெஜினா, வீரபத்ரன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

வெள்ளி பதக்கம் வென்ற ஆனந்த்வேல் குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், வெற்றி வீரர் மேம்பாட்டு திட்டத்தில் பயிற்சி பெற்று வருபவர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
17-நவ-202112:55:57 IST Report Abuse
sridhar சாதனைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Davidson Martin - Chennai,இந்தியா
17-நவ-202111:50:00 IST Report Abuse
Davidson Martin வாழ்த்துக்கள். மேலும் பல வெற்றிகள் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்திட வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Anandan P - Chennai,இந்தியா
17-நவ-202111:07:30 IST Report Abuse
Anandan P வாழ்த்துக்கள் ஆனந்த்வேல் குமார், உங்கள் கனவு நனவாக மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X