மத்திய அரசின் சமூக உணவுக் கூட கொள்கை; உச்ச நீதிமன்றம் அதிருப்தி

Updated : நவ 17, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி : பட்டினி சாவை தடுக்க நாடு முழுதும் சமூக உணவுக் கூடங்களை அமைப்பது தொடர்பாக மத்திய அரசு அளித்த பதிலுக்கு, உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.சமூக ஆர்வலர் அனுன் தவான் உள்ளிட்டோர், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:பசி மற்றும் ஊட்டச் சத்து குறைபாட்டால் தினமும், 5 வயதிற்கு உட்பட்ட பல குழந்தைகள்



புதுடில்லி : பட்டினி சாவை தடுக்க நாடு முழுதும் சமூக உணவுக் கூடங்களை அமைப்பது தொடர்பாக மத்திய அரசு அளித்த பதிலுக்கு, உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.



latest tamil news


சமூக ஆர்வலர் அனுன் தவான் உள்ளிட்டோர், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:பசி மற்றும் ஊட்டச் சத்து குறைபாட்டால் தினமும், 5 வயதிற்கு உட்பட்ட பல குழந்தைகள் இறக்கின்றனர். இது, குடிமக்கள் வாழவும், உணவு பெறுவதற்கும் உள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்.

உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், பட்டினிச் சாவை தடுக்க தேசிய உணவு மையம் ஏற்படுத்தப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.


latest tamil news


அப்போது அமர்வு பிறப்பித்த உத்தரவு:சமூக உணவுக் கூடம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் எந்த உறுதியும் தெரிவிக்கப்படாதது அதிருப்தி அளிக்கிறது.பட்டினிச் சாவை தடுப்பதுதான் ஒரு அரசின் முக்கிய கடமை. எனவே, அடுத்த மூன்று வாரங்களுக்குள் அனைத்து மாநில அரசுகளுடன் பேசி, சமூக உணவுக் கூடம் அமைப்பதற்கான தேசிய கொள்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.

சார்பு நிலை செயலர் வாயிலாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்வது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. துறை செயலர் வாயிலாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய முடியாதா? உயர் அமைப்புகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-நவ-202119:09:15 IST Report Abuse
சம்பத் குமார் 1). எப்படியோ எல்லா எதிர் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இதை கண்டிப்பாக எதிர்பார்த்து விழிமேல் வழி வைத்து காத்துக் கொண்டு இருப்பார்கள்.2). அப்பதான் இந்த சமுதாய கூடம் திட்டம் வந்தவுடன் அதற்கு ஸ்டிக்கர் ஒட்டி தங்கள் சாதனையாக மக்களிடம் விளம்பரம் செய்வார்கள். நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
17-நவ-202114:10:22 IST Report Abuse
Kumar நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி உணவு, உடை, இருப்பிடம் தருவது அரசின் கடமை. உணவுப்பொருள் தருவது அல்ல. யார் சமைத்து சாப்பிடுவது. உடை ஆடையாகத்தான் தரப்படுகிறது. இருப்பிடம் வீடாகத்தான் தரப்படுகிறது. அதுபோல உணவு சமைத்துதான் தரவேண்டும். இது எங்கள் உரிமை. வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
17-நவ-202114:02:48 IST Report Abuse
Ram இதிலிருந்து நீதிமன்றதிற்கு வேறு வேலையில்லை என்று தெரிகிறது …. ஏற்கனவே ரேஷன் மூலியமாக எல்லாம் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் …. அரசை வேலை செய்ய விடாமல் துரத்துவதே நீதிமன்றத்தின் வேலைய
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X