பொது செய்தி

இந்தியா

அன்னிய நேரடி முதலீட்டில் 7 ஆண்டுகளாக சாதனை; தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல்

Updated : நவ 17, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி : இந்தியா, கடந்த 7 ஆண்டுகளில் அன்னிய நேரடி முதலீட்டில் சாதனை படைத்துள்ளது என்றும், இந்த போக்கு மேலும் தொடரும் என்றும், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: இந்தியா, கடந்த 7 ஆண்டுகளில், அன்னிய நேரடி முதலீட்டில் சாதனை புரிந்துள்ளது. அரசு மேற்கொண்டு வரும் பெரிய கட்டமைப்பு

புதுடில்லி : இந்தியா, கடந்த 7 ஆண்டுகளில் அன்னிய நேரடி முதலீட்டில் சாதனை படைத்துள்ளது என்றும், இந்த போக்கு மேலும் தொடரும் என்றும், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.



latest tamil news


இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: இந்தியா, கடந்த 7 ஆண்டுகளில், அன்னிய நேரடி முதலீட்டில் சாதனை புரிந்துள்ளது. அரசு மேற்கொண்டு வரும் பெரிய கட்டமைப்பு மாற்றங்களை பார்க்கும்போது, இந்த போக்கானது, வரும் காலத்திலும் தொடரும் என கருதுகிறேன். பொருளாதார நடவடிக்கைகளில் இந்த முன்னேற்றம் தொடரும்.மேலும் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும்.


latest tamil news


இந்தியா தன் தரத்தை உலகத்துடன் ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு உள்நாட்டு சந்தைக்காகவும், மற்றவை ஏற்றுமதி சந்தைக்காகவும் என்ற மனநிலையை நாடு கைவிட வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து இங்கே வளரும். புதிய வணிகங்களை கையகப்படுத்தும். இந்தியாவில் வேலை வாய்ப்புகளை வழங்கும். சர்வதேச திறன்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் என நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில், அன்னிய நேரடி முதலீடு 62 சதவீதம் அதிகரித்து, 2.03 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
17-நவ-202114:04:07 IST Report Abuse
pradeesh parthasarathy என்னது இங்குள்ள கருப்பு பணம் தனி விமானம் வழியாக mauritius நாட்டுக்கு போகும் ... அப்புறம் அங்கிருந்து அந்நிய முதலீடு என்கிற பெயரில் திரும்பவும் இங்கு உள்ளெ வந்து வெள்ளையாக்கப்படும் ......
Rate this:
Cancel
jeyakumar - chennai,இந்தியா
17-நவ-202111:42:47 IST Report Abuse
jeyakumar சூப்பர் அதனால் தான் அரசுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் கொடுக்கிறீர்களோ. ஒவ்வொரு துறையிலும் தமக்கு சாதகமான அதிகாரிகளை போட்டுக்கொள்கிறீர்கள்.அவர் தனது கட்சியின் ஆதரவாளர்களாக உள்ளார்.துறை ரீதியாக எதுவும் தெரியவில்லை. உங்களுக்கு ஜால்ரா அடிப்பவர்களை போட்டால் எப்படி பொதுத்துறை நிறுவனம் லாபம் ஈட்டும்.தனியாருக்கு கொடுப்பதற்கு எதற்கு மந்திரி பிரதமர் அதிகாரிகள்.இந்த ஏழு ஆண்டுகாலம் இந்திய பொருளாதாரம் எப்படி உள்ளது என உலகம் அறியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X