இந்தியாவுக்கு பயணம்: அமெரிக்கா ஓகே| Dinamalar

இந்தியாவுக்கு பயணம்: அமெரிக்கா 'ஓகே'

Updated : நவ 17, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (1)
Share
வாஷிங்டன்: அமெரிக்காவில் இருந்து பயணம் மேற்கொள்வதற்கான பயண எச்சரிக்கை குறியீட்டில், மிகவும் குறைவான 'லெவல் ஒன்' இடத்தில் இந்தியா இடம்பெற்றுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மற்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு கடந்தாண்டு தடை இருந்தது. அதன்பின் வைரஸ் பரவல் குறைந்ததுடன், தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்தது.இதையடுத்து ஒவ்வொரு நாட்டிலும் வைரஸ் பரவலின் தீவிரம்
US, India, Travel Notice, US Health Body Issues, Level One

வாஷிங்டன்: அமெரிக்காவில் இருந்து பயணம் மேற்கொள்வதற்கான பயண எச்சரிக்கை குறியீட்டில், மிகவும் குறைவான 'லெவல் ஒன்' இடத்தில் இந்தியா இடம்பெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மற்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு கடந்தாண்டு தடை இருந்தது. அதன்பின் வைரஸ் பரவல் குறைந்ததுடன், தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்தது.இதையடுத்து ஒவ்வொரு நாட்டிலும் வைரஸ் பரவலின் தீவிரம் எவ்வளவு உள்ளது என்பது குறித்து, அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பு தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.


latest tamil news


இந்தாண்டு துவக்கத்தில், லெவல் 4ல் இந்தியா இருந்தது. அதாவது, பயணம் மேற்கொள்ள வேண்டாம் என, தன் குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.ஆக., மாதத்தில், லெவல் 2வில் இந்தியா இடம்பெற்றது. இந்நிலையில் தற்போது வெளியிட்டுள்ள பட்டியலில் லெவல் 1ல் உள்ளது. 'தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவல் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது' என, இந்தியா குறித்த புதிய அறிவிப்பில் அமெரிக்கா தெரிவித்துள்ளது.


பாக்., எல்லைக்கு செல்ல வேண்டாம்


வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்வது தொடர்பாக, தன் குடிமக்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. அதன்படி வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கையில், 'இந்தியா - பாக்., எல்லையில் உள்ள பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம். அங்கு பயங்கரவாதம் மற்றும் குற்றச் செயல்கள் நடக்கின்றன' என, எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X