பொது செய்தி

தமிழ்நாடு

தடம் மாறிய ஏரி உபரி நீரால் 500 ஏக்கரில் பயிர் நாசம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
அந்தியூர்: தடம் மாறிய ஏரி உபரி நீரால், அந்தியூர் அருகே, 500 ஏக்கரில் பயிர்கள் மூழ்கி விட்டதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அந்தியூர் அருகே கிருஷ்ணாபுரத்தில் கெட்டிசமுத்திரம் ஏரி உள்ளது. தொடர் மழையால் இரண்டு ஆண்டுகளுக்கு பின், நேற்று காலை முழு கொள்ளளவான, 17.5 அடியை எட்டியது. இதையடுத்து, 200 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. உபரி நீரானது, 5 கி.மீ., தொலைவில் பெரிய

அந்தியூர்: தடம் மாறிய ஏரி உபரி நீரால், அந்தியூர் அருகே, 500 ஏக்கரில் பயிர்கள் மூழ்கி விட்டதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அந்தியூர் அருகே கிருஷ்ணாபுரத்தில் கெட்டிசமுத்திரம் ஏரி உள்ளது. தொடர் மழையால் இரண்டு ஆண்டுகளுக்கு பின், நேற்று காலை முழு கொள்ளளவான, 17.5 அடியை எட்டியது. இதையடுத்து, 200 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. உபரி நீரானது, 5 கி.மீ., தொலைவில் பெரிய ஏரிக்கு வாய்க்கால் மூலம் செல்ல வேண்டும். புதியராசாங்குளம், கூச்சிகல்லூர் உள்ளிட்ட பகுதி விவசாய நிலங்கள் வழியாக வாய்க்கால் செல்கிறது. இரண்டு ஆண்டாக வாய்க்காலில் தண்ணீர் செல்லாததாலும், ஆக்கிரமிப்பாலும், பராமரிப்பை கைவிட்டதாலும், உபரி நீர் தடம் மாறியது. புதியராசாங்குளம், கூச்சிகல்லூர் பகுதியில், நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து, பெரிய ஏரிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கரும்பு, வாழை, மக்காச்சோளம், மஞ்சள், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன. உபரி நீர் வாய்க்காலை பொதுப்பணித்துறையினர் தூர் வாரவும், வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றவும், விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X