பொது செய்தி

தமிழ்நாடு

மஞ்சள் விலை உயர வாய்ப்பு?

Added : நவ 17, 2021
Share
Advertisement
ஈரோடு: மஞ்சள் விலை உயர வாய்ப்புள்ளதாக, ஈரோடு மஞ்சள் வணிகர் மற்றும் கிடங்கு உரிமையாளர் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: தீபாவளிக்குப்பின் மஞ்சள் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்தபடி உயரவில்லை. இதனால் விவசாயிகள், குறைந்த அளவே மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கடந்த ஜன., - பிப்., மாதங்களில், ஒரு

ஈரோடு: மஞ்சள் விலை உயர வாய்ப்புள்ளதாக, ஈரோடு மஞ்சள் வணிகர் மற்றும் கிடங்கு உரிமையாளர் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: தீபாவளிக்குப்பின் மஞ்சள் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்தபடி உயரவில்லை. இதனால் விவசாயிகள், குறைந்த அளவே மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கடந்த ஜன., - பிப்., மாதங்களில், ஒரு குவிண்டால், 10 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது. அப்போது இருப்பு வைத்த மஞ்சளை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆனால், குறிப்பிட்ட நாட்களுக்குப்பின் மீண்டும் விலை சரியத்துவங்கியது. கடந்த மூன்று மாதமாக ஏற்றுமதி ஓரளவு இருந்து, தற்போது குறையத்துவங்கி விட்டது. மஹாராஷ்டிரா, தெலுங்கானா மாநிலங்களில், டிச.,15க்கு பின் அறுவடை செய்யப்பட்டு, மார்க்கெட்டுக்கு மஞ்சள் வரத்தாகும். அப்பகுதியில் அதிக மழை பெய்ததால், வரத்து குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. அதேநேரம் ஈரோடு மாவட்டத்தில் பவானி, அந்தியூர் பகுதியில், வரும் ஜன., மாதமும், காளிங்கராயன் பாசன பகுதியில் பிப்., மாதமும் அறுவடை துவங்கி, புது மஞ்சள் வரத்தாகும். கடந்த நிதியாண்டின் முடிவில், மஞ்சள் ஏற்றுமதி அதிகம் இருந்ததால் விலை உயர்ந்தது. அதுபோல, இந்தாண்டும் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X