பொது செய்தி

தமிழ்நாடு

'கருவாடு விற்ற காசு நாறாது: ஆனால் கழிவுநீர் மீன்...?'

Added : நவ 17, 2021
Share
Advertisement
சென்னிமலை: நொய்யல் ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால், சென்னிமலை அருகே ஒரத்துப்பாளையம் அணைக்கு, வினாடிக்கு, 650 கன அடி நீர் தற்போது வரத்தாகிறது. வழக்கம்போல் திருப்பூர் சாயப்பட்டறை கழிவு நீர் கலந்து வருவதால், கால்நடைகள் குடிப்பதற்கே லாயக்கில்லாத தண்ணீர், நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, பாசனத்துக்கு நீர் திறக்க வேண்டிய

சென்னிமலை: நொய்யல் ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால், சென்னிமலை அருகே ஒரத்துப்பாளையம் அணைக்கு, வினாடிக்கு, 650 கன அடி நீர் தற்போது வரத்தாகிறது. வழக்கம்போல் திருப்பூர் சாயப்பட்டறை கழிவு நீர் கலந்து வருவதால், கால்நடைகள் குடிப்பதற்கே லாயக்கில்லாத தண்ணீர், நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, பாசனத்துக்கு நீர் திறக்க வேண்டிய அணையில் கழிவுநீரே செல்கிறது. ஆற்று நீர்தான் நாறுகிறதே தவிர, அதில் வளரும் ஜிலேபி, ஆரால் உள்ளிட்ட மீன்களை, ஒரு சிலர் பிடித்தும் செல்கின்றனர். கடந்த சில மாதங்களாக, அப்பகுதியில் தங்கியுள்ள வடமாநில இளைஞர்கள் சிலர், அணை பகுதியில் மீன் பிடிப்பதை தொழிலாக்கி விட்டனர். பிடிக்கும் மீன்களை சென்னிமலை, ஊத்துக்குளி, திருப்பூர் சுற்று வட்டாரபகுதி தள்ளுவண்டி கடைகளுக்கு, சலுகை விலையில் விற்பதாக தெரிகிறது. மேலும், பார்கள் இல்லாத டாஸ்மாக் கடைகள் அருகில், இந்த மீன்கள் தான் பொறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அணையையே நட்டாற்றில் விட்ட நம்ம ஊரு அதிகாரிகள், இதையெல்லாம் கண்டு கொள்வார்களா என்ன? அதானே, கருவாடு விற்ற காசு நாறவா போகிறது...?

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X