பொது செய்தி

தமிழ்நாடு

நம்பியூர் தாசில்தாரை இடமாற்றம் செய்ய வேண்டும்: வி.ஏ.ஓ.,க்கள், கிராம உதவியாளர்கள் ஆவேசம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
கோபி: தாசில்தாரை இடமாற்றம் செய்யக்கோரி, நம்பியூர் தாலுகா வி.ஏ.ஓ.,க்கள், கிராம உதவியாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.நம்பியூர் அருகே கூடக்கரையை சேர்ந்தவர் ரத்தினசாமி. தனக்கு சொந்தமான நிலத்துக்கு உண்மை தன்மை, தடையின்மை சான்று கேட்டு, நம்பியூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதற்காக, 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற, எலத்தூர் வி.ஏ.ஓ., ராம்ஜி, மண்டல துணை தாசில்தார்

கோபி: தாசில்தாரை இடமாற்றம் செய்யக்கோரி, நம்பியூர் தாலுகா வி.ஏ.ஓ.,க்கள், கிராம உதவியாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
நம்பியூர் அருகே கூடக்கரையை சேர்ந்தவர் ரத்தினசாமி. தனக்கு சொந்தமான நிலத்துக்கு உண்மை தன்மை, தடையின்மை சான்று கேட்டு, நம்பியூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதற்காக, 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற, எலத்தூர் வி.ஏ.ஓ., ராம்ஜி, மண்டல துணை தாசில்தார் அழகேசன், புரோக்கர் முத்துகுமார் ஆகியோரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இருவரும் சஸ்பெண்டும் செய்யப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், நம்பியூர் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கூட்டமைப்பினர், நம்பியூர் தாசில்தார் மாரிமுத்துவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த சங்கம் மற்றும் கூட்டமைப்பின் அவசர கூட்டம், நம்பியூரில் நேற்று நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, கோபி ஆர்.டி.ஓ., பழனிதேவியை சந்தித்து, 20க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.,க்கள் மனுவாக அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியிருப்பதாவது: நம்பியூர் தாசில்தார் மாரிமுத்து, அலுவலக ஊழியர்களை ஜாதி ரீதியாக திட்டுகிறார். அரசு கோப்புகளில், விசாரணை அறிக்கையை, தன் விருப்பத்துக்கு மாற்றி தரக்கூறுகிறார். அலுவலக ரீதியாக செய்யாத செலவினங்களுக்கு ரசீது பெற்றுத்தர நிர்ப்பந்திக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை, தாலுகா அலுவலக ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொள்ளமாட்டோம். கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிவோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த மனுவை ஆர்.டி.ஓ., பழனிதேவி, கலெக்டருக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.

ஆர்.டி.ஓ., விசாரணை: தாசில்தார் மீது புகார் தெரிவித்து மனு வழங்கிய சங்க நிர்வாகிகள், வி.ஏ.ஓ.,க்களிடம், ஆர்.டி.ஓ.. பழனிதேவி அரை மணி நேரம் விசாரணை செய்தார். அதில் அனைவரும் தாசில்தார் மீது அதிருப்தி கருத்தையே பதிவை செய்து, அவரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தினர். இதுகுறித்து விளக்கம் கேட்க, மாரிமுத்துவை பலமுறை தொடர்பு கொண்டும், அவரது மொபைல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X