காதலுக்கு கண்கள் இல்லை மானே: மில் தொழிலாளி விபரீத முடிவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'காதலுக்கு கண்கள் இல்லை மானே': மில் தொழிலாளி விபரீத முடிவு

Added : நவ 17, 2021
Share
ஈரோடு: ஈரோடு ரயில்வே போலீஸ் எல்லைக்குட்பட்ட, சங்ககிரி-மாவிலிபாளையம் ரயில் தண்டவாளத்தில், தலை துண்டித்த வாலிபர் பிணம் நேற்று கிடந்தது. ரயில்வே போலீசார் விசாரணையில், சங்ககிரி, வடுகபட்டியை சேர்ந்த மோகன்ராஜ், 32; வெப்படையில் ஒரு மில்லில் வேலை செய்து வந்தது தெரிந்தது. மதுரை மாவட்டத்தை சேர்ந்த மகாலட்சுமி என்பவரை, ஐந்து ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஈரோடு: ஈரோடு ரயில்வே போலீஸ் எல்லைக்குட்பட்ட, சங்ககிரி-மாவிலிபாளையம் ரயில் தண்டவாளத்தில், தலை துண்டித்த வாலிபர் பிணம் நேற்று கிடந்தது. ரயில்வே போலீசார் விசாரணையில், சங்ககிரி, வடுகபட்டியை சேர்ந்த மோகன்ராஜ், 32; வெப்படையில் ஒரு மில்லில் வேலை செய்து வந்தது தெரிந்தது. மதுரை மாவட்டத்தை சேர்ந்த மகாலட்சுமி என்பவரை, ஐந்து ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். மூன்று வயதில் மகள் உள்ளார். கருத்து வேறுபாட்டால், கணவனை மகாலட்சுமி பிரிந்தார். விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடக்கிறது. இந்நிலையில் தன்னுடன் வேலை பார்த்த, சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்த சித்ராவை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். சித்ரா குடும்பத்தினர் ஏற்காமல், சித்ராவை மீட்டு தாரமங்கலம் போலீசில் புகார் கொடுக்கும்படி செய்தனர். விசாரணையில் பெற்றோருடன் செல்வதாக சித்ரா தெரிவித்து விட்டார். இரண்டாவது காதல் மனைவியும் நிலைக்காத சோகத்தில், நேற்று முன்தினம் இரவு ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து, தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடலை அனுப்பினர். தற்கொலைக்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, உடலை பெற்றுக்கொள்வதாக மோகன்ராஜின் உறவினர்கள் கூறினர். போலீசார் சமாதானத்தை தொடர்ந்து, உடலை பெற்றுக் கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X