சென்னை:'நீதிபதிகள் நியமனம், இடமாற்றம் குறித்து முடிவெடுக்க, உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கு அதிகாரம் உள்ளது. அதை ஏற்காதது துரதிருஷ்டவசமானது' என, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியின் இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்யக்கோரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நான்கு மூத்த நீதிபதிகளுக்கு வழக்கறிஞர்கள் கடிதம் அனுப்பினர்.இதற்கு பதில் அளிக்கும் விதத்தில், 574 வழக்கறிஞர்கள் பெயரில் வெளியான கடிதம்: நீதிபதிகள் இடமாற்றம் வழக்கமானது தான்; தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி இடமாற்றத்துக்கு வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு மனுவும் அனுப்பி உள்ளனர்.

தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானியை, மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்த போதும், வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினர் ஆட்சேபித்தனர். இவர்கள் ஏற்படுத்திய குழப்பம், கடைசியில் அவரது ராஜினாமாவில் முடிந்தது. நீதிபதிகள் இடமாற்ற கொள்கையை, இந்த பிரிவினர் எதிர்க்கவில்லை; குறிப்பிட்ட நீதிபதிகள் இடமாற்றத்தை மட்டுமே எதிர்க்கின்றனர். நீதிபதிகள் நியமனம், இடமாற்றம் செய்ய கொலீஜியத்துக்கு தான் அதிகாரம் உள்ளது. அதை மதிக்காதது துரதிருஷ்டவசமானது; நீதிமன்ற அவமதிப்பு போலானது.
எனவே, நீதிமன்ற செயல்பாடுகளுக்கு பாதகமாக இருக்கும் வழக்கறிஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, தலைமை நீதிபதி மற்றும் பார் கவுன்சிலை கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE