பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடை பூங்காவில் மரம் அகற்ற நிர்ணயித்ததை விட 2 மடங்கு கூடுதல் விலைக்கு ஏலம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
தலைவாசல்: கால்நடை பூங்காவில் மரம் ஏலம் எடுப்பதில் கடும் போட்டியால், நிர்ணயித்ததை விட, இரு மடங்கு கூடுதல் விலைக்கு ஏலம் விடப்பட்டது.தலைவாசல், வி.கூட்ரோடு ஆட்டுப்பண்ணை, 1,866.28 ஏக்கரில் உள்ளது. அதில், 1,096 ஏக்கரில், 1,000 கோடி ரூபாயில் கால்நடை பூங்கா, ஆராய்ச்சி மைய கட்டுமானப்பணி நடக்கிறது. கால்நடை பூங்கா வளாகத்தில் இடையூறாக உள்ள, 1,833 மரங்களை அகற்ற, நேற்று ஏலம் நடந்தது. கால்நடைத்துறை

தலைவாசல்: கால்நடை பூங்காவில் மரம் ஏலம் எடுப்பதில் கடும் போட்டியால், நிர்ணயித்ததை விட, இரு மடங்கு கூடுதல் விலைக்கு ஏலம் விடப்பட்டது.


தலைவாசல், வி.கூட்ரோடு ஆட்டுப்பண்ணை, 1,866.28 ஏக்கரில் உள்ளது. அதில், 1,096 ஏக்கரில், 1,000 கோடி ரூபாயில் கால்நடை பூங்கா, ஆராய்ச்சி மைய கட்டுமானப்பணி நடக்கிறது. கால்நடை பூங்கா வளாகத்தில் இடையூறாக உள்ள, 1,833 மரங்களை அகற்ற, நேற்று ஏலம் நடந்தது. கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் புரு ?ஷாத்தமன், துணை இயக்குனர் ராஜேந்திரன், வனவர் ராஜா உள்ளிட்ட குழுவினர் ஏலம் நடத்தினர். ஏழு வகையாக மரங்கள் வகைப்பாடு செய்து, அதன் மதிப்பு தொகை, 3.61 லட்சம் ரூபாய் என அறிவிக்கப்பட்டது. 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த, 219 மர வியாபாரிகள் பங்கேற்றனர். அதில், தி.மு.க., நிர்வாகிகளால் கடும் போட்டி நிலவியது. மர மதிப்பு தொகையை விட, இரு மடங்கு கூடுதலாக, 9.78 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. இதுகுறித்து, ராஜேந்திரன் கூறுகையில், ''ஏலம் விடப்பட்ட 1,833 மரங்களுக்கு பதில், 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன,'' என்றார்.

தி.மு.க.,வினர் 'சிண்டிகேட்': வெளியூரை சேர்ந்த மர வியாபாரிகள் அதிகம் வந்தனர். சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் பலர், 'டிபாசிட்' செலுத்தினர். கூடுதல் தொகைக்கு மரம் ஏலம் எடுக்க விருப்பம் தெரிவித்த வியாபாரிகளிடம், தி.மு.க.,வினர் பேச்சு நடத்தினர். குறிப்பாக, வியாபாரிகளுடன் ஆளுங்கட்சியினர், 'சிண்டிகேட்' அமைத்து ஏலம் எடுத்தனர். அதேநேரம், இந்த மரங்களை வெட்டக்கூடாது என, 'சேலமே குரல்கொடு' ஒருங்கிணைப்பாளர் பியூஸ் மானுஷ் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X