பொது செய்தி

தமிழ்நாடு

சேலத்தில் இன்று முதல் 3 நாள் மக்களிடம் மனு பெறும் அமைச்சர்

Added : நவ 17, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மத்திய மாவட்ட தி.மு.க., செயலர் ராஜேந்திரன், பொறுப்பாளர்கள் சிவலிங்கம்(கிழக்கு) செல்வகணபதி (மேற்கு) ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாவட்டத்தில், நவ., 17ல்(இன்று) தொடங்கி, 19 வரை, தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, மக்களிடம் குறை கேட்டறிந்து, மனுக்கள் பெறுகிறார். அதன்படி, 17ல்(இன்று) தலைவாசல், ஆத்தூர், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம்(பழையது),

சேலம்: சேலம் மத்திய மாவட்ட தி.மு.க., செயலர் ராஜேந்திரன், பொறுப்பாளர்கள் சிவலிங்கம்(கிழக்கு) செல்வகணபதி (மேற்கு) ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாவட்டத்தில், நவ., 17ல்(இன்று) தொடங்கி, 19 வரை, தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, மக்களிடம் குறை கேட்டறிந்து, மனுக்கள் பெறுகிறார். அதன்படி, 17ல்(இன்று) தலைவாசல், ஆத்தூர், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம்(பழையது), வாழப்பாடி, சேலம் தெற்கு தாலுகா அலுவலகத்தில் மனு பெறுகிறார். நாகியம்பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், மனு பெற்று, நல உதவி வழங்குகிறார். அதேபோல், 18ல்(நாளை), குருக்குப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இலங்கை தமிழர்களிடம் மனுக்கள் பெற்று, நல உதவிகள் வழங்குகிறார். ஓமலூர் வேலாசாமி மேல்நிலைப்பள்ளி, நடுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, மேட்டூர் தாலுகா அலுவலகத்தில் மனுக்கள் பெறுகிறார். பூலாம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வு, பின், 5 பேரூராட்சிக்கு கூட்டுக்குடிநீர் வழங்கும், 652.84 கோடி ரூபாய் பணிகளை பார்வையிடுகிறார். தொடர்ந்து, இடைப்பாடி, சங்ககிரி தாலுகா அலுவலகத்தில் மனுக்கள் பெறுகிறார். 19ல் ஏற்காடு பிரதான சாலையில் உள்ள சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக், அம்மாபேட்டை சக்தி கைலாஷ் பெண்கள் கல்லூரி, கலெக்டர் அலுவலக அறை எண்: 215, சவுடேஸ்வரி கல்லூரி, சோனா தொழில் நுட்ப கல்லூரியில் மனுக்கள் பெறப்படுவதால், மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X