பொது செய்தி

தமிழ்நாடு

ராமன்குட்டை நிரம்பி குடியிருப்புகளில் புகுந்த வெள்ளம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
சேலம்: ராமன்குட்டை நிரம்பி, குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. சேலம் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அதிகபட்சம் வீரகனூரில், 50 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. கெங்கவல்லி, 36, மேட்டூர், 28.4, ஓமலூர், 27, ஏற்காடு, 10, காடையாம்பட்டி, சேலம் தலா, 8.5, தம்மம்பட்டி, 6, கரியகோவில், 5, ஆணைமடுவு, 4, ஆத்தூர், 3.4, பெத்தநாயக்கன்பாளையம், 2, சங்ககிரியில், 1.4 மி.மீ., மழை பெய்துள்ளது. கடந்த அக்., 1 முதல், நேற்று

சேலம்: ராமன்குட்டை நிரம்பி, குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. சேலம் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அதிகபட்சம் வீரகனூரில், 50 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. கெங்கவல்லி, 36, மேட்டூர், 28.4, ஓமலூர், 27, ஏற்காடு, 10, காடையாம்பட்டி, சேலம் தலா, 8.5, தம்மம்பட்டி, 6, கரியகோவில், 5, ஆணைமடுவு, 4, ஆத்தூர், 3.4, பெத்தநாயக்கன்பாளையம், 2, சங்ககிரியில், 1.4 மி.மீ., மழை பெய்துள்ளது. கடந்த அக்., 1 முதல், நேற்று வரை, சேலம் மாவட்டத்தில், 335.9 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இயல்பான அளவு, 254.1 மி.மீ., இத்துடன் ஒப்பிடுகையில், 32 சதவீதம் அதிகம். தொடர் மழையால், சேலத்தில் நேற்று முன்தினம் இரவு ராமன்குட்டை நிரம்பி, உபரிநீர் வெளியேறியது. இதனால், அழகாபுரம், முத்துகவுண்டர் தெரு, அர்ஜூனன் தெரு, சோனா தெரு, கிரீன்வே சாலைகளில் தண்ணீர் புகுந்து பெருக்கெடுத்து ஓடியது. சாரதா கல்லூரி சுவரில் துளையிட்டு, அதன் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேநேரம், சாரதா கல்லூரி வளாகம் முழுதும், குளமாகவே மாறிவிட்டது.

கமிஷனர் ஆய்வு: நேற்று காலை, மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ், மழைநீரில் இறங்கி ஆய்வு செய்தார். பின், மின்மோட்டார், பொக்லைன் மூலம், தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X