பொது செய்தி

தமிழ்நாடு

ஜருகுமலையில் தொடரும் மண் சரிவு

Added : நவ 17, 2021
Share
Advertisement
பனமரத்துப்பட்டி: சேலம், எருமாபாளையம், பனங்காட்டிலிருந்து, 7 கி.மீ., மலைப்பாதையில், ஜருகுமலைக்கு சமீபத்தில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. பல இடங்களில் தடுப்புச்சுவர் இல்லை. நேற்று முன்தினம், 2வது கி.மீ., 4வது வளைவு உள்ளிட்ட இடங்களில், மண் சரிவு ஏற்பட்டு, பாறைகள் சாலையில் உருண்டு விழுந்தன. ஒரு மரம், சாலையில் சாயும் அபாய நிலையில் உள்ளது. மண் குவியல் சாலையில் கிடப்பதால்,

பனமரத்துப்பட்டி: சேலம், எருமாபாளையம், பனங்காட்டிலிருந்து, 7 கி.மீ., மலைப்பாதையில், ஜருகுமலைக்கு சமீபத்தில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. பல இடங்களில் தடுப்புச்சுவர் இல்லை. நேற்று முன்தினம், 2வது கி.மீ., 4வது வளைவு உள்ளிட்ட இடங்களில், மண் சரிவு ஏற்பட்டு, பாறைகள் சாலையில் உருண்டு விழுந்தன. ஒரு மரம், சாலையில் சாயும் அபாய நிலையில் உள்ளது. மண் குவியல் சாலையில் கிடப்பதால், மழைநீரில் இருசக்கர வாகனங்களை சறுக்கி விடுகின்றன. சிறு கற்கள், பாறைகளை, மலைக்கிராம மக்கள் தள்ளிவிட்டு சீரமைத்தனர். இருப்பினும் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு, சாலையில் கற்கள் விழுந்ததால் தற்போது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலையை சீரமைத்து மண்சரிவு ஏற்படாதபடி தடுப்புச்சுவர் கட்ட, மக்கள் வலியுறுத்தினர்.

கல்லுக்கட்டு சாலை: ஆத்தூர், பைத்தூர் ஊராட்சியில் பைத்தூர், அம்மன் நகர், நைனார்பாளையம், கல்லுக்கட்டு, வானபுரம், தவளப்பட்டி உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. அதில், கல்லுக்கட்டு கிராமத்துக்கு செல்லும் சாலை பகுதியொட்டி, பாறைகள் உருண்டு சாலையில் விழுந்துள்ளன. சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிப்பால், நேற்று, மக்கள் சேர்ந்து, பாறைகளை அகற்றிவிட்டு பயணித்தனர். தடுப்புச்சுவர் அமைக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X