பொது செய்தி

இந்தியா

ராஜஸ்தானில் பெட்ரோல் ரூ.4, டீசல் ரூ.5 வாட் வரி குறைப்பு

Updated : நவ 17, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஜெய்ப்பூர்: பெட்ரோல் மீதான வாட் வரியை லிட்டருக்கு ரூ.4, டீசல் விலையை ரூ.5 குறைத்து ராஜஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணிகளால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100ஐ தாண்டியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
Rajasthan, Petrol Diesel, VAT Reduce, ராஜஸ்தான், பெட்ரோல், டீசல், வாட் வரி, குறைப்பு

ஜெய்ப்பூர்: பெட்ரோல் மீதான வாட் வரியை லிட்டருக்கு ரூ.4, டீசல் விலையை ரூ.5 குறைத்து ராஜஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணிகளால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100ஐ தாண்டியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியில் முறையே ரூ.5, 10 என மத்திய அரசு குறைத்தது.


latest tamil news


அதுமட்டுமின்றி, பா.ஜ., ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியையும் குறைத்தன. இதனையடுத்து விலை எதிர்பார்த்ததை விட குறைந்ததால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தானிலும் பெட்ரோல், டீசல் விலை மீதான வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பெட்ரோல் மீதான வாட் வரியில் ரூ 4-ம், டீசல் மீதான வாட் வரியில் ரூ.5-ம் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த மாற்றம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-நவ-202111:44:40 IST Report Abuse
சம்பத் குமார் 1). கச்சா எண்ணெய் விலை இன்னும் மூன்று ஆறு மாதங்களில் பயங்கரமான உச்சத்தை தொடும் சூழல் நிலவுகிறது. 2). மத்திய அரசாங்கம் விலையை குறைத்து நல்ல பெயர் வாங்கி கொண்டது.3). ஏற்கனவே மற்ற மாநிலங்களை கம்பேர் செய்யும் பொழுது குறிப்பாக நமது பாண்டிச்சேரி சகோதரர்களுக்கு தோராயமாக தமிழ்நாட்டைவிட பதினைந்து ரூபாய் விலை குறைவாக கிடைக்கிறது.4). இப்படியே விலை ஏற்றத்துடன் இந்த விலை தொடர்ந்தால் இன்னும் ஆறு மாதங்களில் பெட்ரோல் ரூ 125 வந்தாலும் ஆச்சரியப்பட வேண்டியது இல்லை.6). தமிழக மக்களுக்கு உண்மையாகவே நன்மை செய்ய கூடிய எந்த விஷயமாக இருந்தாலும் நாங்கள் அதை இந்தியாவில் கடைசி மாநிலமாக தான் செய்வோம் என்பதில் எங்களது கொள்கையளவில் மாற்றம் செய்யமாட்டோம்.7). தேர்தல் பரப்புரைகளில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு பற்றிய தேதியை நாங்கள் எதுவும் குறிப்பிடவில்லை இது சம்பந்தமாக தமிழக நிதியமைச்சர் தெளிவான பதிலை பத்திரிக்கையாளர் பேட்டியின் போது தெரிவித்து விட்டார்.8). தோழமை சுட்டும் திரு தொல் திருமாவளவன், திரு சீமான், கம்னியூஸ்ட் போராளிகள் இது சம்பந்தமாக வாயை திண்டுக்கல் பூட்டு போட்டு வைத்து இருப்பது ஒன்றும் புரியவில்லை.9). எங்கே போனது ஊடகங்கள்??? இது சம்பந்தமாக எத்தனை விவாதங்கள் மற்றும் பட்டி மன்றங்கள் நடைபெற்றன.10). சொல்லப்போனால் இந்தமாதிரியான ஊடகங்களை மக்கள் பிரித்து பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக புறக்கணிக்க தொடங்கி விட்டார்கள். 11). திமுக அரசாங்கம் அவர்கள் அவர்கள் வழியில் போய் கொண்டு உள்ளார்கள். 12). ஆனால் ஊடகங்கள் திமுகவிற்கு மக்களின் அதிருப்தியை சம்பாதித்து உதவி செய்கிறேன் என்று கடைசியாக மக்களிடம் கெட்ட பெயர் வாங்கி கூடிய விரைவில் காணாமல் போய்விடும் சூழல் நிலவுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X