பொது செய்தி

தமிழ்நாடு

பிரதோஷத்தையொட்டி நந்திக்கு சிறப்பு பூஜை

Added : நவ 17, 2021
Share
Advertisement
தர்மபுரி: பிரதோஷத்தையொட்டி, தர்மபுரி நெசவாளர் காலனி மஹாலிங்கேஸ்வரர் கோவில் பிரகாரத்திலுள்ள நந்திக்கு, நேற்று மாலை பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால், சிறப்பு ?அபிஷேக, அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, இக்கோவில் மூலவர் மஹாலிங்கேஸ்வரருக்கு பல்வேறு திரவியங்களால், சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. இதேபோல், தர்மபுரி கோட்டை

தர்மபுரி: பிரதோஷத்தையொட்டி, தர்மபுரி நெசவாளர் காலனி மஹாலிங்கேஸ்வரர் கோவில் பிரகாரத்திலுள்ள நந்திக்கு, நேற்று மாலை பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால், சிறப்பு ?அபிஷேக, அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, இக்கோவில் மூலவர் மஹாலிங்கேஸ்வரருக்கு பல்வேறு திரவியங்களால், சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில் உள்பட, மாவட்டத்திலுள்ள பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

* அரூர் சந்தைமேட்டிலுள்ள வாணீஸ்வரர் கோவிலில், சுவாமிக்கும் நந்திக்கும், சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதேபோல், அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள வர்ணீஸ்வரர் கோவில், பொம்மிடி அருணாச்சல ஈஸ்வரன் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், தென்கரைகோட்டை நஞ்சுண்டேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் சிறப்பு பூஜை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X