பொது செய்தி

தமிழ்நாடு

நடப்பாண்டில் தடுத்து நிறுத்திய 116 குழந்தை திருமணங்கள்

Added : நவ 17, 2021
Share
Advertisement
தர்மபுரி: ''தர்மபுரி மாவட்டத்தில், நடப்பாண்டில் இதுவரை, 116 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன'' என, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி பேசினார்.தர்மபுரியில் நேற்று, மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பாக, மாவட்ட திட்ட அலுவலர் வைத்தியநாதன் தலைமையில் நடந்த, குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணத்தை தடுப்பது

தர்மபுரி: ''தர்மபுரி மாவட்டத்தில், நடப்பாண்டில் இதுவரை, 116 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன'' என, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி பேசினார்.


தர்மபுரியில் நேற்று, மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பாக, மாவட்ட திட்ட அலுவலர் வைத்தியநாதன் தலைமையில் நடந்த, குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், குழந்தை திருமணத்தை தடுக்க, 251 பஞ்.,க்களிலும், வி.ஏ.ஓ.,க்கள், போலீசார், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் மூலம், நடப்பாண்டில் இதுவரை, 116 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. குழந்தை திருமணம் குறித்து, மாணவியர், இளம்பெண்களிடம் விழிப்புணர்வும், எடுக்கப்படும் சட்ட நடவடிக்கை, சிறைதண்டனை உள்ளிட்டவை குறித்தும் பொதுமக்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. குழந்தை திருமணம் தொடர்பான புகார்களை மக்கள், தங்கள் பகுதிகளிலுள்ள விழிப்புணர்வு குழுவினர் அல்லது இலவச தொலைபேசி எண்ணான, 1077ல் தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர் பேசினார். இதில், ஏ.டி.எஸ்.பி., குணசேகரன், தர்மபுரி தாசில்தார் ராஜராஜன், குழந்தைகள் நலக்குழு தலைவர் சரவணன் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X