சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றுக்குள் பாய்ந்த ஜீப்: தந்தை, மகள் பரிதாப பலி

Added : நவ 17, 2021
Share
Advertisement
காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே, கட்டுப்பாட்டை இழந்த ஜீப் அருகேயிருந்த கிணற்றில் பாய்ந்ததில், ஜீப்பில் இருந்த தந்தை, மகள் பலியாகினர். தாயை அருகிலிருந்தவர்கள் உயிருடன் மீட்டனர்.சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்தவர் வீரன், 40; இவர், பெங்களூருவில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி உமா, 35, மகள் சுஷ்மிதா, 13; இவர் பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளியில், ஏழாம் வகுப்பு

காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே, கட்டுப்பாட்டை இழந்த ஜீப் அருகேயிருந்த கிணற்றில் பாய்ந்ததில், ஜீப்பில் இருந்த தந்தை, மகள் பலியாகினர். தாயை அருகிலிருந்தவர்கள் உயிருடன் மீட்டனர்.


சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்தவர் வீரன், 40; இவர், பெங்களூருவில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி உமா, 35, மகள் சுஷ்மிதா, 13; இவர் பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வந்தார். வீரன் வாரம் ஒருமுறை சொந்த ஊருக்கு தன் காரில் குடும்பத்துடன் வந்து செல்வது வழக்கம். இதேபோல் கடந்த, இரு நாட்களுக்கு முன் மேட்டூர் வந்த வீரன், நேற்று குடும்பத்தினருடன் பொலிரோ ஜீப்பில், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக பெங்களூரு சென்றுகொண்டிருந்தார். மதியம், 2:45 மணிக்கு பொன்னேரியில் உள்ள தாபாவில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு புறப்பட்டனர். ஜீப்பை எடுத்தபோது வீரனின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், அருகில் செவத்தான் என்பவருடைய, 65 அடி ஆழ விவசாய கிணற்றுக்குள் பாய்ந்தது. அப்போது ஜீப் கதவு திறந்ததால் உள்ளேயிருந்த உமா, கிணற்று நீரில் விழுந்து தத்தளித்தார். அவரை அருகே இருந்த சிலர் மீட்டனர். இந்நிலையில், ஜீப்பில் இருந்த வீரனும், மகள் சுஷ்மிதாவும் காருடன் கிணற்றில் மூழ்கினர். காரிமங்கலம் போலீசார், பாலக்கோடு மற்றும் தர்மபுரி தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றில் மூழ்கியவர்களை மழைக்கு மத்தியில் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கிணற்றில், 55 அடி அளவுக்கு தண்ணீர் இருந்ததால், ஐந்து பம்பு செட்டுகள் மூலம், இரவு, 8:30 மணி வரை, 15 அடி அளவுக்கே கிணற்று நீரை வெளியேற்ற முடிந்தது. இரவு, 8:45 மணிக்கு கிணற்றில் இருந்து வீரன், சிறுமி சுஷ்மிதா சடலமாக மீட்கப்பட்டனர். கிரேன் மூலம் ஜீப்பையும் வெளியே எடுத்தனர். பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X