கூரை விழுந்து 5 பேர் காயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூரை விழுந்து 5 பேர் காயம்

Added : நவ 17, 2021
Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த ஒரு மாதமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு வீடுகளின் மாடியில் மழைநீர் தேங்கி உள்ளது. கிருஷ்ணகிரியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதில், கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு எல்.ஐ.ஜி., பேஸ், 2ல் வசிக்கும் ஓய்வுபெற்ற அரசு கலை ஆசிரியர் சந்திரசேகர் என்பவரின் வீட்டின் கூரை இரவு, 11:00 மணிக்கு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த ஒரு மாதமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு வீடுகளின் மாடியில் மழைநீர் தேங்கி உள்ளது. கிருஷ்ணகிரியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதில், கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு எல்.ஐ.ஜி., பேஸ், 2ல் வசிக்கும் ஓய்வுபெற்ற அரசு கலை ஆசிரியர் சந்திரசேகர் என்பவரின் வீட்டின் கூரை இரவு, 11:00 மணிக்கு இடிந்து விழுந்தது. இதில், வீட்டில் தூங்கி கொண்டிருந்த சந்திரசேகர், 72, அவரது மனைவி சரோஜா, 50, மகள் புனிதா, 34, பேத்தி பவதாரணி, 9, பேரன் பூர்ணிஸ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X