வாகன திருட்டில் ஈடுபட்ட ஐந்து பேர் கும்பல் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகன திருட்டில் ஈடுபட்ட ஐந்து பேர் கும்பல் கைது

Added : நவ 17, 2021
Share
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தொடர் பைக் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை கைது செய்ய, சூளகிரி இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சூளகிரி அடுத்த சப்படி ஜங்ஷன் பகுதியில், நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த, ஐந்து பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள், பர்கூர்,

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தொடர் பைக் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை கைது செய்ய, சூளகிரி இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சூளகிரி அடுத்த சப்படி ஜங்ஷன் பகுதியில், நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த, ஐந்து பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள், பர்கூர், குண்டியல் நத்தத்தை சேர்ந்த தட்சணாமூர்த்தி, 26, திருப்பத்தூர் மாவட்டம், சின்னவேப்பம்பட்டை சேர்ந்த அரசன், 24, ஐ.டி.ஐ., முதலாமாண்டு மாணவன் சந்தோஷ், 19, திருவேங்கடம், 31, வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த பனந்தோப்பை சேர்ந்த சதீஷ்குமார், 24, என்பதும், தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 41 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர் மனோகரன், எஸ்.ஐ.,க்கள் கணேஷ்பாபு, ஆனந்த் மற்றும் போலீசாருக்கு, நேற்று சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி பாராட்டினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X