பொது செய்தி

தமிழ்நாடு

'நடிகர் சூர்யாவிற்கு இ.கம்யூ., துணை நிற்கும்'

Added : நவ 17, 2021
Share
Advertisement
ஓசூர்: ''நடிகர் சூர்யாவிற்கு இ.கம்யூ., கட்சி துணை நிற்கும்,'' என, அதன் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன் கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய அரசு இதுவரை யாரும் செய்ய துணியாத காரியத்தை செய்ய துணிந்துள்ளது. தனித்துவமான உச்சநீதிமன்ற நீதிபதி மாற்றப்பட்டு இருப்பது, நீதித்துறையை சிதைக்க மறைமுகமாக மத்திய அரசு எடுக்கும்

ஓசூர்: ''நடிகர் சூர்யாவிற்கு இ.கம்யூ., கட்சி துணை நிற்கும்,'' என, அதன் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன் கூறினார்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய அரசு இதுவரை யாரும் செய்ய துணியாத காரியத்தை செய்ய துணிந்துள்ளது. தனித்துவமான உச்சநீதிமன்ற நீதிபதி மாற்றப்பட்டு இருப்பது, நீதித்துறையை சிதைக்க மறைமுகமாக மத்திய அரசு எடுக்கும் முயற்சியை, இ.கம்யூ., கண்டிக்கிறது. நாட்டில் அரசியல் கட்சிகளை மிரட்ட, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வு துறையை, மத்திய அரசு பயன்படுத்தி, அரசியல் ஆதாயங்களை உருவாக்குவதற்கான சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இரு ஆண்டுக்கு ஒருமுறை நியமிக்க வேண்டிய மத்திய புலனாய்வுத்துறை மற்றும் அமலாக்கத்துறை பதவிக்காலத்தை, பார்லிமென்டில் விவாதிக்காமல் அவசர சட்டத்தை இயற்றி, ஐந்து ஆண்டுகளாக மாற்றியுள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலின், வெள்ள நிவாரணம் முடிந்த பின், ஊழல் பற்றிய ஒரு தனியான விசாரணை அமைப்பேன் என கூறியது வரவேற்கத்தக்கது. 'ஜெய்பீம்' படம் ஒடுக்கப்பட்ட, சாதாரண மக்களுக்காக, 60 ஆண்டுகாலமாக, கம்யூ., போராட்டம் நடத்தியதை கவுரவிக்கும் அளவில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் ஆகியோருக்கு பாராட்டுகள். இப்படம் குறிப்பிட்ட ஜாதியை இழிவுப்படுத்தும் படம் இல்லை. இப்படத்திற்கு, இ.கம்யூ., முழு ஆதரவு தருவதோடு, இன்றைய நெருக்கடி மிகுந்த சூழலில், நடிகர் சூர்யாவிற்கு துணை நிற்பதுடன், அரசியல் போராட்டமாக நடத்தும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X