3 நாட்களாக தொடர் மழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

3 நாட்களாக தொடர் மழை

Added : நவ 17, 2021
Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டதில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் உள்பட, 19 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தும், நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்காததால், மாணவ, மாணவியர் பெற்றோருடன் மழையின் நனைந்தபடி பள்ளிக்கு சென்றனர். இதனால் பலர் சிரமத்திற்கு உள்ளாகினர்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டதில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் உள்பட, 19 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தும், நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்காததால், மாணவ, மாணவியர் பெற்றோருடன் மழையின் நனைந்தபடி பள்ளிக்கு சென்றனர். இதனால் பலர் சிரமத்திற்கு உள்ளாகினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில், 52.9 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதேபோல், ஓசூர், 19.2, தளி, 15, சூளகிரி, 8, தேன்கனிக்கோட்டை, 7, ராயக்கோட்டை, 6, அஞ்செட்டி, 2, என மொத்தம் 110.1 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நேற்று முன்தினம், 1073 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் தொடர் மழையால் நேற்று, 1,346 கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து, 1,088 கன அடிநீர் திறக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 51.29 அடியாகவும், நீர்இருப்பு, 1.57 டி.எம்.சி.,யாகவும் உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X