பொது செய்தி

தமிழ்நாடு

கனமழைக்கு இடிந்த 8 வீடுகள்; நெல்வயலில் தேங்கிய மழைநீர்

Added : நவ 17, 2021
Share
Advertisement
ஓசூர்: தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையில் அப்பகுதியில் இருந்த எட்டு வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும், நெல் வயல்களில் மழைநீர் அதிகளவில் தேங்கியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை ஒன்னுகுறுக்கியை சேர்ந்த முனிகிருஷ்ணப்பா, ஒசபுரத்தை சேர்ந்த அன்னையப்பா, அரசகுப்பத்தை சேர்ந்த சரோஜம்மா, வெங்கடாபுரத்தை சேர்ந்த

ஓசூர்: தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையில் அப்பகுதியில் இருந்த எட்டு வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும், நெல் வயல்களில் மழைநீர் அதிகளவில் தேங்கியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை ஒன்னுகுறுக்கியை சேர்ந்த முனிகிருஷ்ணப்பா, ஒசபுரத்தை சேர்ந்த அன்னையப்பா, அரசகுப்பத்தை சேர்ந்த சரோஜம்மா, வெங்கடாபுரத்தை சேர்ந்த வெங்கடசாமி, சாரகப்பள்ளியை சேர்ந்த ராமப்பா ஆகியோரது வீடுகளின் சுவர்கள், கனமழைக்கு இடிந்து விழுந்தன. அவற்றை, தேன்கனிக்கோட்டை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதேபோல், அஞ்செட்டி அடுத்த பிலிகுண்டுலுவை சேர்ந்த மலர், அனிதா, அருள்மேரி ஆகியோரது வீடுகளும், கனமழைக்கு சேதமாகியுள்ளன. சூளகிரி அடுத்த சின்னதின்னூரில், கனமழையால் விவசாயி கண்ணப்பன், என்பவரது, ஐந்து ஏக்கர் நெல் பயிர் நீரில் மூழ்கியது. அவற்றை அறுவடை செய்ய முடியாததால், பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என, அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X