சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி மீது கார் மோதல்; இரண்டு பேர் பலி

Added : நவ 17, 2021
Share
Advertisement
பள்ளிகொண்டா: பள்ளிகொண்டா அருகே, நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் பலியாகினர். சென்னை, ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 66. அதேபகுதியில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வந்தார். கடந்த, 14ல் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, தர்மபுரிக்கு, டாடா இண்டிகா காரில் சென்றார். ஆவடியை சேர்ந்த ராஜேந்திரன், 61, என்பவர் காரை ஓட்டினார். விழா

பள்ளிகொண்டா: பள்ளிகொண்டா அருகே, நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் பலியாகினர். சென்னை, ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 66. அதேபகுதியில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வந்தார். கடந்த, 14ல் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, தர்மபுரிக்கு, டாடா இண்டிகா காரில் சென்றார். ஆவடியை சேர்ந்த ராஜேந்திரன், 61, என்பவர் காரை ஓட்டினார். விழா முடிந்ததும் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு காரில் சென்னைக்கு புறப்பட்டனர். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே கோவிந்தபாடிக்கு இரவு, 10:00 மணிக்கு வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தியிருந்த லாரி மீது, கார் மோதியது. இதில் இடிபாடுகளில் சிக்கிய இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நள்ளிரவு, 12:00 மணிக்கு கோவிந்தசாமியும், நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு ராஜேந்திரனும் இறந்தனர். பள்ளிகொண்டா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X