பொது செய்தி

தமிழ்நாடு

முக்கொம்பு அணையில் 5,800 கனஅடி நீர் திறப்பு

Added : நவ 17, 2021
Share
Advertisement
திருச்சி: டெல்டா பாசனத்திற்காக, திருச்சி முக்கொம்பு அணையில் இருந்து காவிரி ஆற்றில், 5,800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் , கடந்த, 14ம் தேதி முதல், அணையில் இருந்து, 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதுதவிர, பவானி சாகர் அணையில் இருந்து திறக்கப்பட்ட, 4,000 கனஅடி தண்ணீரும், அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட, 3,000 கனஅடி

திருச்சி: டெல்டா பாசனத்திற்காக, திருச்சி முக்கொம்பு அணையில் இருந்து காவிரி ஆற்றில், 5,800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் , கடந்த, 14ம் தேதி முதல், அணையில் இருந்து, 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதுதவிர, பவானி சாகர் அணையில் இருந்து திறக்கப்பட்ட, 4,000 கனஅடி தண்ணீரும், அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட, 3,000 கனஅடி தண்ணீரும் காவிரி ஆற்றில் வந்து கலக்கிறது. இவற்றில் வரும் தண்ணீர் முழுவதும், கரூர் மாவட்டம், மாயனூர் கதவணையில் இருந்து, காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் நள்ளிரவு, திருச்சி மாவட்டம், முக்கொம்பு அணைக்கு, 45 ஆயிரம் கனஅடி நீர் வரத்தானது. ஏற்கனவே தொடர் மழை காரணமாக, குடமுருட்டி ஆறு, கோரையாறு, கொடிக்கால் ஆறு போன்றவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், காவிரி ஆற்றில், தண்ணீர் திறப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது, டெல்டா மாவட்ட விவசாயிகள் தரப்பில், பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும், என்று கோரிக்கை விடுக்கப்பட்டதால், முக்கொம்பு அணையிலிருந்து, பாசனத்துக்காக, நேற்று முன்தினம் இரவு, கல்லணைக்கு, காவிரி ஆற்றில், 5,800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், முக்கொம்பு மேலணையில் இருந்து, கொள்ளிடம் ஆற்றில், 38 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X