பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்புகளை அகற்றாதவரை வெள்ள பிரச்னை தீராது: நேரு ஆதங்கம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
திருச்சி: ''ஆக்கிரமிப்பை அகற்றினால் மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். அகற்றாவிட்டால் தண்ணீர் தேங்கும் பிரச்னை தீராது,'' என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு கூறினார்.திருச்சி மாநகரில் வெள்ள பாதித்த பகுதிகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரணம் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம்

திருச்சி: ''ஆக்கிரமிப்பை அகற்றினால் மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். அகற்றாவிட்டால் தண்ணீர் தேங்கும் பிரச்னை தீராது,'' என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு கூறினார்.


திருச்சி மாநகரில் வெள்ள பாதித்த பகுதிகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரணம் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி மாநகரில் தேங்கி உள்ள நீரை அகற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வடிகால் பகுதிகளில் ஆக்கிரமிப்பை அகற்றினால் தண்ணீர் எங்கும் தேங்காது. ஆனால் ஆக்கிரமிப்பை அகற்றினால் மக்கள் போராட்டம் செய்கின்றனர். தண்ணீர் தேங்கினால் ஏன் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என்று கேட்கின்றனர். அதே தண்ணீர் வடிந்து விட்டால், எனக்கு இடம் கொடு என்று கேட்கின்றனர். என்ன செய்ய முடியும். ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எல்லா நீர்நிலைகளிலும் மக்கள் வீட்டை கட்டிக் கொண்டு அரசுக்கு சிரமம் கொடுக்கின்றனர். வேற வழியில்லை. அனுபவித்துத்தான் ஆக வேண்டும். சென்னையில் புளியந்தோப்பு உள்ளிட்ட மூன்று இடங்களில் தான் தண்ணீர் வடியாமல் உள்ளது. அப்பகுதியில் மெட்ரோ தண்ணீர் பைல், டிரைனேஜ் குழாய்கள் பழுதடைந்து விட்டன. அவற்றை மாற்ற வேண்டும். அதற்கு நான்கு ஆண்டுகள் ஆகும். மேலும் இப்பிரச்னையை தீர்க்க வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, எதிர் காலத்தில் பிரச்னை இல்லாமல் பார்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். மழையால் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப் போகாது. அதை நடத்த வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார். கடந்த ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மழைநீர் வடிய எந்த பணியும் செய்யவில்லை. வேறு பணிகளை செய்துள்ளனர். அதில் தவறு நடந்துள்ளது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X