பொது செய்தி

தமிழ்நாடு

ராசிமணலில் அணை கட்ட வேண்டும்; பி.ஆர்.பாண்டியன்

Added : நவ 17, 2021
Share
Advertisement
பென்னாகரம்: ''ராசிமணல் பகுதியில் அணை கட்ட வேண்டும்,'' என, தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார். ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் நேற்று, அங்கு வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காவிரியாற்றில் வெளியேற்றப்படும் உபரி நீர், வீணாக கடலில் கலக்கிறது. இந்த போக்கு வருத்தமளிக்கிறது. கர்நாடகா அணை கட்ட

பென்னாகரம்: ''ராசிமணல் பகுதியில் அணை கட்ட வேண்டும்,'' என, தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார். ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் நேற்று, அங்கு வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காவிரியாற்றில் வெளியேற்றப்படும் உபரி நீர், வீணாக கடலில் கலக்கிறது. இந்த போக்கு வருத்தமளிக்கிறது. கர்நாடகா அணை கட்ட முயற்சித்து வரும் நிலையில், தமிழக அரசு ஒகேனக்கல் அருகே உள்ள ராசிமணலில் உடனடியாக அணை கட்ட வேண்டும். இதன் மூலம் ஏராளமான விவசாய நிலங்கள் பயன்பெற முடியும். தமிழக அரசு உடனடியாக அணைகட்டி வீணாக கடலில் கலக்கும் நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X