பொது செய்தி

தமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 38 ஆயிரம் கன அடியாக குறைந்தது

Added : நவ 17, 2021
Share
Advertisement
ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று மாலை வினாடிக்கு, 38 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து சரிந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரமடைந்ததால், கர்நாடகாவிலுள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டி, அங்கிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று, கபினி அணையிலிருந்து வினாடிக்கு, 2,000 கன அடி, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து வினாடிக்கு, 11 ஆயிரம் கன அடி என மொத்தம், 13 ஆயிரம் கன

ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று மாலை வினாடிக்கு, 38 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து சரிந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரமடைந்ததால், கர்நாடகாவிலுள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டி, அங்கிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று, கபினி அணையிலிருந்து வினாடிக்கு, 2,000 கன அடி, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து வினாடிக்கு, 11 ஆயிரம் கன அடி என மொத்தம், 13 ஆயிரம் கன அடி உபரிநீர் காவிரியில் திறக்கப்படுகிறது. இந்நிலையில், ஒகேனக்கல் நீர்பிடிப்பு பகுதியை ஒட்டிய பிலிகுண்டுலு, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, கேரிட்டி, நாட்றாம்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் மழை சற்று குறைந்ததால், ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிந்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 45 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 38 ஆயிரம் கன அடியாக சரிந்தது. ஏற்கனவே, காவிரியாற்றில் குளிக்க தடை மற்றும் மெயின் பால்ஸ்க்கு செல்லும் நடைப்பாதை மீது தண்ணீர் பாய்ந்தோடுவதால், நடைப்பாதையை பூட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று, இரண்டாவது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X