ஒகேனக்கல் காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை; துரைமுருகன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை; துரைமுருகன்

Added : நவ 17, 2021
Share
ஒகேனக்கல்: ''ஒகேனக்கல் காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்ட அவர், நிருபர்களிடம் கூறியதாவது: காவிரியாற்றின் குறுக்கே ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் அணைகள் கட்டுவது குறித்து, நீண்ட நாட்களாகவே மாநிலங்களுக்கிடையே சில

ஒகேனக்கல்: ''ஒகேனக்கல் காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.


ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்ட அவர், நிருபர்களிடம் கூறியதாவது: காவிரியாற்றின் குறுக்கே ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் அணைகள் கட்டுவது குறித்து, நீண்ட நாட்களாகவே மாநிலங்களுக்கிடையே சில பிரச்னைகள் உள்ளன. அதை சரிசெய்த பின், அணை கட்டுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். காவிரியாற்றின் உபரிநீரை தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏரிகளில் நிரப்பினால், விவசாயம் செழிக்கும், வாழ்வாதாரம் உயரும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போது, ஒகேனக்கல்லில் ஆய்வு செய்தபோது, மழைக்காலங்களில் அதிகமாக செல்லும் உபரிநீரை, பென்னாகரம் அருகே உள்ள கெண்டேயன்குட்டை ஏரியில் நிரப்பி, பின் அனைத்து ஏரிகளையும் நிரப்ப எனக்குள் எண்ணம் வந்துள்ளது. இதுகுறித்து துறை அதிகாரிகளை கொண்டு ஒரு விரிவான ஆய்வு செய்தபின், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார். ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி, தர்மபுரி, தி.மு.க.,-எம்.பி., செந்தில்குமார், பா.ம.க.,-எம்.எல்.ஏ.,க்கள், ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X