பொது செய்தி

தமிழ்நாடு

நூல் விலை உயர்வை கண்டித்து இன்று முதல் 2 நாள் கடையடைப்பு போராட்டம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
ஈரோடு: நூல் விலை உயர்வை கண்டித்து, ஈரோட்டில் இன்று முதல், இரண்டு நாட்களுக்கு ஜவுளி சார்ந்த நிறுவனங்கள் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். அவ்வப்போது ஏற்படும் நூல் விலை உயர்வால், ஜவுளி தொழில் பின்னடைவை சந்திக்கிறது. நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என விசைத்தறியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் என பல்வேறு தரப்பில் மத்திய, மாநில அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

ஈரோடு: நூல் விலை உயர்வை கண்டித்து, ஈரோட்டில் இன்று முதல், இரண்டு நாட்களுக்கு ஜவுளி சார்ந்த நிறுவனங்கள் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். அவ்வப்போது ஏற்படும் நூல் விலை உயர்வால், ஜவுளி தொழில் பின்னடைவை சந்திக்கிறது. நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என விசைத்தறியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் என பல்வேறு தரப்பில் மத்திய, மாநில அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு துணி வியாபாரிகள் சங்கம் சார்பில் இன்றும், நாளையும் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.


இதுபற்றி, துணி வியாபாரிகள் கூறியதாவது: கடந்த சில மாதங்களாக நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் பாதிக்கின்றனர். கடந்த ஒரு மாதத்தில், 40ம் நம்பர் நூல் ஒரு கிலோ, 80 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. 30ம் நம்பர் நூல், 90 ரூபாய், 20ம் நம்பர் நூல் 50 ரூபாய், வெப்ட், 40ம் நம்பர் ஒரு பாக்கெட், 3,200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஜவுளி ஆர்டர் பெற்றவர்கள் நூல் விலை உயரும்போது, அதை ஆர்டர் பெற்ற தொகைக்குள் செய்து முடிக்க முடியாமல் திணறுகின்றனர். நஷ்டத்தை சந்திக்கின்றனர். எனவே, இக்கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில், துணி வியாபாரிகள், நூல் வியாபாரிகள், பிளீச்சிங், டையிங் உரிமையாளர் சங்கம் என பல்வேறு சங்கத்தினர் ஆதரவுடன் இன்றும், நாளையும் கடையடைப்பு போராட்டம் நடத்துகிறோம். நான்காயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனை சார்ந்த கடைகள் அடைக்கப்படும். இவ்வாறு கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X