பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லூரி கட்டுவதற்கு எதிர்ப்பு; கரூர் அருகே முழு கடையடைப்பு

Added : நவ 17, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் அருகே, அரசு கல்லூரியை தரகம்பட்டியில் அமைக்க கோரி, முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது.கரூர் மாவட்டம் தரகம்பட்டி அரசு கலை அறிவியல் கல்லூரி, 2020ல் தொடங்கப்பட்டது. தற்காலிகமாக பழைய ஊராட்சி ஒன்றிய கட்டடத்தில் இயங்கும் கல்லூரியில், 600 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கிருந்து, 7 கி.மீ., தொலைவில் தண்ணீர்மந்தமேட்டில், தனியார் தானமாக அளித்த இடத்தில், கல்லூரி கட்ட

கரூர்: கரூர் அருகே, அரசு கல்லூரியை தரகம்பட்டியில் அமைக்க கோரி, முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது.


கரூர் மாவட்டம் தரகம்பட்டி அரசு கலை அறிவியல் கல்லூரி, 2020ல் தொடங்கப்பட்டது. தற்காலிகமாக பழைய ஊராட்சி ஒன்றிய கட்டடத்தில் இயங்கும் கல்லூரியில், 600 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கிருந்து, 7 கி.மீ., தொலைவில் தண்ணீர்மந்தமேட்டில், தனியார் தானமாக அளித்த இடத்தில், கல்லூரி கட்ட முடிவு செய்துள்ளனர். அப்பகுதிக்கு போக்குவரத்து வசதி இல்லை. இதனால் ஊர் மக்கள் தானமாக வழங்கும், 5 ஏக்கரில் சந்தைப்பேட்டை அருகில் கல்லூரி கட்ட மனு அளிக்கப்பட்டது. ஆனாலும், கட்டுமான பணி தொடங்க அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதை கண்டித்து, தரகம்பட்டியில் முழு கடையடைப்பு போராட்டம், மக்கள் சார்பில் நேற்று நடந்தது. கோரிக்கையை வலியுறுத்தி, கடவூர் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X