சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் கொலை: சகோதரர்கள் கைது

Updated : நவ 17, 2021 | Added : நவ 17, 2021
Share
Advertisement
குமாரபாளையம்: குமாரபாளையம் வாலிபர் கொலை வழக்கில் சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் அரவிந்த், 24. திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணி. வெங்கடேசன், 42, தனியார் நிறுவன ஊழியர். இருவரும் நண்பர்கள். கடந்த, 14 முதல் அரவிந்த்தை காணவில்லை. அவரது தந்தை ஜெகதீஸ் கொடுத்த புகார்படி குமாரபாளையம் போலீசார் விசாரித்தனர். இதில் அரவிந்த்

குமாரபாளையம்: குமாரபாளையம் வாலிபர் கொலை வழக்கில் சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் அரவிந்த், 24. திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணி. வெங்கடேசன், 42, தனியார் நிறுவன ஊழியர். இருவரும் நண்பர்கள். கடந்த, 14 முதல் அரவிந்த்தை காணவில்லை. அவரது தந்தை ஜெகதீஸ் கொடுத்த புகார்படி குமாரபாளையம் போலீசார் விசாரித்தனர். இதில் அரவிந்த் இறுதியாக வெங்கடேசன் வீட்டுக்கு சென்றதாக நண்பர்கள் கூறினர். இதையடுத்து வெங்கடேசன் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து விசாரிக்க வேண்டும் என, வலியுறுத்தி. போலீஸ் ஸ்டேஷனை அரவிந்த் உறவினர்கள் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் விசாரித்து, வெங்கடேசனையும், அவரது தம்பி கிருஷ்ண ராஜையும் கைது செய்தனர்.
இதுகுறித்து, டி.எஸ்.பி., சீனிவாசன் கூறியதாவது: வெங்கடேசனின் மனைவிக்கு சில நாட்களுக்கு முன் அரவிந்த் போன் செய்து ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன், அரவிந்தை கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த, 14ல் அரவிந்தை தன் வீட்டுக்கு வரசொல்லியுள்ளார். வீட்டிலிருந்தவர்களை விசேஷத்திற்கு அனுப்பி விட்டார். வீட்டுக்கு வந்த அரவிந்திடம் வாக்குவாதம் நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் தண்ணீர் தொட்டியில் அழுத்தி அரவிந்தை கொலை செய்துள்ளார். அதன் பின் அவரது தம்பி கிருஷ்ணராஜ், 39, கோணிப்பையில் சடலத்தை போட்டு மூட்டை கட்டி வீட்டினுள் வைத்து விட்டனர். அன்று இரவு பழைய காவிரி பாலத்தில் சடலத்தை போட்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X