பொது செய்தி

தமிழ்நாடு

மோகனூர் அ.தி.மு.க., பெண் சேர்மேன் பதவிக்கு ஆபத்து

Added : நவ 17, 2021
Share
Advertisement
நாமக்கல்: தி.மு.க.,வில் பலம் கூடியுள்ள நிலையில், மோகனூர் யூனியன் அ.தி.மு.க., சேர்மேன் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் யூனியனில், 15 கவுன்சிலர்களில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வில் தலா ஏழு பேர், பா.ம.க.,வில் ஒருவர் கவுன்சிலராக உள்ளனர். பா.ம.க., ஆதரவுடன், அ.தி.மு.க.,வின் சரஸ்வதி, சேர்மேனாகவும், பா.ம.க., கவுன்சிலர் பிரதாப் துணை சேர்மேனாகவும் உள்ளனர். இந்நிலையில்,

நாமக்கல்: தி.மு.க.,வில் பலம் கூடியுள்ள நிலையில், மோகனூர் யூனியன் அ.தி.மு.க., சேர்மேன் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் யூனியனில், 15 கவுன்சிலர்களில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வில் தலா ஏழு பேர், பா.ம.க.,வில் ஒருவர் கவுன்சிலராக உள்ளனர். பா.ம.க., ஆதரவுடன், அ.தி.மு.க.,வின் சரஸ்வதி, சேர்மேனாகவும், பா.ம.க., கவுன்சிலர் பிரதாப் துணை சேர்மேனாகவும் உள்ளனர். இந்நிலையில், வளையப்பட்டி நான்காவது வார்டு, அ.தி.மு.க., கவுன்சிலர் கற்பகம், தி.மு.க.,வில் இணைந்தார். இதனால் தி.மு.க., எண்ணிக்கை, எட்டு ஆனது. தலைவர் பதவிக்கு மீண்டும் தேர்தல் வந்தால், தி.மு.க.,வுக்கு ஆதரவளிப்பதாக, துணை சேர்மேன் பிரதாப் கடிதம் கொடுத்துள்ளார். இதனால் சேர்மேன் சரஸ்வதி மீது, தி.மு.க.,வினர் விரைவில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X