உ.பி.,யில் மீண்டும் பா.ஜ., ஆட்சி, காங்.,கிற்கு 4வது இடம்; கருத்துக்கணிப்பில் தகவல்

Updated : நவ 17, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
புதுடில்லி: உத்தரபிரதேசத்தில் பா.ஜ., அரசு மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், காங்கிரஸ் கட்சி 4வது இடத்தையே பிடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக இப்போதிருந்தே தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில்
BJP, Retain, UP, SP, Distant Second, Congress, Survey, பாஜ, பாஜக, உபி, உத்தரபிரதேசம், காங்கிரஸ், சமாஜ்வாதி, கருத்துக்கணிப்பு

புதுடில்லி: உத்தரபிரதேசத்தில் பா.ஜ., அரசு மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், காங்கிரஸ் கட்சி 4வது இடத்தையே பிடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக இப்போதிருந்தே தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில் பா.ஜ., 312 இடங்களில் வென்று சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில், 2022ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கட்சிகள் பெறப்போகும் இடங்கள் குறித்து டைம்ஸ் நவ் மற்றும் போல்ஸ்ட்ரட் நிறுவனம் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தியது. நவ.,6 முதல் நவ.,10 வரை மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பா.ஜ.,வே ஆட்சியை தொடர பெரும்பாலான மக்கள் விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.


latest tamil news


மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பா.ஜ., 239 முதல் 245 இடங்களில் வெற்றிப்பெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 தேர்தலில் பா.ஜ., 312 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் கடந்தமுறை 47 இடங்களில் வென்றிருந்த சமாஜ்வாதி கட்சி இம்முறை 119 முதல் 125 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 28 முதல் 32 இடங்களும், காங்கிரஸ் கட்சி 5 முதல் 8 இடங்களிலும் வெற்றிப்பெறும் எனக் கூறப்படுகிறது. இந்த கருத்துக்கணிப்புகளின் படி, பா.ஜ., ஆட்சியை தக்கவைக்கும் எனில், உ.பி.,யில் தொடர்ச்சியாக 2 முறை முதல்வராக பொறுப்பேற்ற முதல் முதல்வர் என்னும் சிறப்பை பெறுவார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
17-நவ-202121:46:17 IST Report Abuse
elakkumanan அஞ்சு முறை மக்கள் ஏமாந்த்தும் ஒரு முறை கூட மக்களை திருப்தி படுத்த துப்பில்லாத எங்க ஊரு இயக்கத்தினர்களுக்கு.. திருடாமல் ஆட்சி செய்தால், மக்கள் நம்புவார்கள் என்பதுதான் அடிப்படை பாடம்.. படிப்போமா இந்த முறையாவது? இல்லைனா, மீண்டும் பத்து அல்லது பதினைந்து வருட வனவாசமா? துப்பில்லாத கழிவுகள்... பேச்சு மட்டும் குறைவில்லை.... தராதரம் இல்லாத தரு... கத்துக்கோங்க பி ஜெ பி இடம்...ஒரு முறையேனும் தொடர்ச்சியாக ஜெயித்து பாருங்க.. துப்புக்கெட்ட பிழைப்புக்கு மீண்டும் போயிடாதீங்க...
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
17-நவ-202119:19:29 IST Report Abuse
RajanRajan அரசு ஆட்சி நிர்வாகம் என்பது தேசப்பற்று மிக்கவர்களிடம் இருப்பது தான் ஜனநாயகத்திற்கும் மக்களுக்கும் பாதுகாப்பு. தவறினால் ஜனநாயக உரிமைகள் தீவிரவாதம் வரை தேசத்தை கொண்டு சென்று விடுமே.
Rate this:
Cancel
Sandru - Chennai,இந்தியா
17-நவ-202118:53:48 IST Report Abuse
Sandru நினைப்புதான் பொழப்பை கெடுக்கும் என்பதற்கு இதை வீட வேறு எதையும் சொல்ல முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X