பொது செய்தி

இந்தியா

முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க தனி நேரம்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

Updated : நவ 17, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: அரசியல் விவகாரங்களை தாண்டி, முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க சட்டசபைகளில் தனி நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில், லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில், அனைத்து மாநில சட்டசபை சபாநாயகர்களின் மாநாடு நடந்தது.இந்த மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
பிரதமர் மோடி, நரேந்திரமோடி, பிரதமர், Narendramodi, india,

புதுடில்லி: அரசியல் விவகாரங்களை தாண்டி, முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க சட்டசபைகளில் தனி நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில், லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில், அனைத்து மாநில சட்டசபை சபாநாயகர்களின் மாநாடு நடந்தது.

இந்த மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்தியாவை பொறுத்தவரை, ஜனநாயகம் என்பது வெறும் அமைப்பு மட்டும் அல்ல. அது இந்தியாவுடன் இணைந்த ஒன்றாக உள்ளது. வருங்காலங்களில் நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அசாதாரணமான இலக்குகளையும் எட்ட அனைவரும் ஒற்றுமையாக முயற்சிக்க வேண்டும். ஜனநாயகத்தில், இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம், மாநிலங்களின் பங்கு ஆகியன பெரிய அடித்தளமாக உள்ளது. ஒற்றுமையாக இருந்து சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.


latest tamil news



வடகிழக்கு மாநிலங்களில் நிறைவுபெறாமல் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த மிகப்பெரிய வளர்ச்சி திட்டங்கள் உட்பட ஏராளமான திட்டங்கள், கடந்த சில ஆண்டுகளில், அனைவரின் முயற்சிகள் மூலம் நிறைவு பெற்றுள்ளது. கோவிட்டிற்கு எதிரான மிகப்பெரிய போரில், அனைத்து மாநிலங்களையும் ஒன்றாக சேர்த்து ஒன்றாக நமது நாடு போராடியது. இன்று 110 கோடி டோஸ் தடுப்பூசி என்ற வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை இந்தியா எட்டி உள்ளது. ஒரு காலத்தில் சாத்தியமில்லாதது என கருதப்பட்டது. இன்று சாத்தியம் ஆகியுள்ளது.

இந்தியா சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, ஒவ்வொருவரும் தங்களின் கடமைகளை செய்வதே, அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாட்டின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.

நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எதிராக எழும் குரல்களை கண்காணிப்பது மக்கள் பிரதிநிதிகளின் பணியாக இருக்க வேண்டும். அரசியல் விவகாரங்கள் தாண்டி, முக்கியமான விஷயங்கள் குறித்து ஆக்கப்பூர்வமாகவும் ஆரோக்கியமாகவும் விவாதிக்க சட்டசபைகளில் தனி நேரம் ஒதுக்கப்பட வேண்டும். இந்தியாவின் மாண்புகளை மதித்து, மக்கள் பிரதிநிதிகளின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sandru - Chennai,இந்தியா
17-நவ-202118:48:33 IST Report Abuse
Sandru தலைவா எங்கயோ போய்ட்டிங்க . ஆனா பேச்சு பேச்சு மாத்திரமாத்தான் இருக்கணும் . ஆமா சொல்லிப்புட்டேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X