ஆக்கிரமிப்பு பகுதிகளை உடனே காலி செய்யுங்க; பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா

Updated : நவ 17, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
நியூயார்க்: ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தான் தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் உடனடியாக காலி செய்ய வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.நியூயார்க்கில் உள்ள ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தலைமையகத்தில் நடைபெற்ற விவாதத்தில் காஷ்மீர் பிரச்னையை
India, Slams, Pakistan, UNSC, Vacate, Illegally Occupied Areas, JK, இந்தியா, பாகிஸ்தான், ஐநா, ஆக்கிரமிப்பு பகுதிகள்

நியூயார்க்: ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தான் தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் உடனடியாக காலி செய்ய வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

நியூயார்க்கில் உள்ள ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தலைமையகத்தில் நடைபெற்ற விவாதத்தில் காஷ்மீர் பிரச்னையை பாகிஸ்தான் எழுப்பியது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா.,வுக்கான நிரந்தர பிரதிநிதி காஜல் பட் கூறியதாவது: பாகிஸ்தானின் பிரதிநிதி முன்வைத்த சில அற்பமான கருத்துக்களுக்கு நான் மீண்டும் ஒருமுறை பதிலளிக்க கடமைப்பட்டுள்ளேன். இந்தியாவின் நிலைப்பாட்டை நான் திட்டவட்டமாக கூற விரும்புகிறேன். ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய முழு யூனியன் பிரதேசமும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக எப்போதும் இருக்கும்.


latest tamil news


இதில் பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பகுதிகளும் அடங்கும். பாகிஸ்தான் தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் உடனடியாக காலி செய்ய வேண்டும். ஐ.நா., வழங்கிய தளங்களை இந்தியாவுக்கு எதிரான தீங்கிழைக்கும் பிரசாரத்திற்காக தவறாக பயன்படுத்துவது பாகிஸ்தான் பிரதிநிதிக்கு இது முதல்முறையல்ல. தனது நாட்டின் சோகமான நிலையில் இருந்து உலகின் கவனத்தை திசைதிருப்ப வீணாக முயல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
17-நவ-202118:12:55 IST Report Abuse
pattikkaattaan வாய்ச்சொல் வீரர்கள் என்றைக்கு வாளேந்துவார்கள் என்று தெரியவில்லை ... திரும்ப திரும்ப பேசிட்டே இருக்கீங்க ..
Rate this:
Cancel
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
17-நவ-202117:34:42 IST Report Abuse
Srivilliputtur S Ramesh என்னம்மா , இது ? முக்கியமான பிரச்னையை விட்டுட்டீங்களே .... பாகிஸ்தான்ல இருக்கற பலுசிஸ்தான் தனி நாடு பிரச்னையை எழுப்பினாலே போதும் . பாகிஸ்தான் காணாமப்போயிடும்... கில்கிட், பல்டிதிஸ்தான், ஆகிய பிரதேசங்களின் தன்னாட்சி பற்றி ஐ. நா. வுல பேசுங்க. பாகிஸ்தான் நடுங்கிரும்..
Rate this:
Cancel
rajan - thane,இந்தியா
17-நவ-202117:12:41 IST Report Abuse
rajan சிரிச்சி சிரிச்சி வந்தான் சீனா காரன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X