பொது செய்தி

தமிழ்நாடு

வந்துட்டேன்னு சொல்லு; திரும்ப வந்துட்டேன்னு சொல்லு; 8 மாவட்டங்களுக்கு மழை மிரட்டல்

Added : நவ 17, 2021
Share
Advertisement
சென்னை: ‛‛திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் இன்று (நவ.,17) இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும்,'' என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
TN RAINFALL, 8 DISTRICT HEAVYRAIN, TN,Tamilnadu,Weather, REPORT, தமிழகம், 8 மாவட்டங்கள், மிக கனமழை, வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு,

சென்னை: ‛‛திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் இன்று (நவ.,17) இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும்,'' என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:



தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து நாளை 18 ம் தேதி தெற்கு ஆந்திரா - வடதமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும்.


latest tamil news



இன்று (நவ.,17 ம்தேதி): திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார், விழுப்புரம், ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, அரியலுார், பெரம்பலுார், திருவண்ணாமலை, சேலம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.


latest tamil news


நாளை 18 ம்தேதி: திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமுத் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகன மழையும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம், திருப்பத்துார், வேலுார் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்்கால் பகுதிகளில் பெரும்பலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை


latest tamil news


அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமுதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஷை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஷை ஒட்டி இருக்கும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு


திருமூர்த்தி (திருப்பூர்) 13 செ.மீ., மங்களபுரம் (நாமக்கல்) 11 செ.மீ., கெங்கவல்லி (சேலம்) 8 செ.மீ., காட்பாடி (வேலுார்), அரூர் (தர்மபுரி), திருமூர்த்தி அணை (திருப்பூர்), பந்தலுார் (நீலகிரி) தலா 7 செ.மீ., செட்டிகுளம் (பெரம்பலுார்), செங்கம் (திருவண்ணாமலை), திருப்புவனம் (சிவகங்கை), மேட்டூர் (சேலம்) தலா 6 செ.மீ.,


latest tamil news




மீனவர்களுக்கான எச்சரிக்கை



வங்கக்கடல் பகுதிகள்


இன்று 17ம் தேதி மற்றும் 18 ம்தேதி: மத்திய மேற்கு, தென்மேற்கு வங்கக்கடல் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வரும் 19ம் தேதி: தென்மேற்கு வங்கக்கடல் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X