டி.வி விவாதங்களே அதிக மாசை உருவாக்குகின்றன; உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை| Dinamalar

டி.வி விவாதங்களே அதிக மாசை உருவாக்குகின்றன; உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை

Updated : நவ 17, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (30)
Share
புதுடில்லி: டி.வி சேனல்களில் நடைபெறும் விவாதங்களே அதிக மாசுபாட்டை உருவாக்குவதாகவும், டில்லியில் நட்சத்திர ஓட்டல்களில் அமர்ந்துக்கொண்டு, விவசாயிகள் கழிவுகளை எரிப்பதால் அதிக மாசு ஏற்படுவதாக பேசுவது வேதனையளிப்பதாகவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.டில்லியை உலுக்கி வரும் காற்று மாசு குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
TV Debates, Pollution, Supreme Court, People, Delhi, Star Hotels, Blame Farmers, டிவி, விவாதங்கள், மாசு, மக்கள், டில்லி, உச்சநீதிமன்றம், சுப்ரீம் கோர்ட், தலைமை நீதிபதி, ரமணா

புதுடில்லி: டி.வி சேனல்களில் நடைபெறும் விவாதங்களே அதிக மாசுபாட்டை உருவாக்குவதாகவும், டில்லியில் நட்சத்திர ஓட்டல்களில் அமர்ந்துக்கொண்டு, விவசாயிகள் கழிவுகளை எரிப்பதால் அதிக மாசு ஏற்படுவதாக பேசுவது வேதனையளிப்பதாகவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

டில்லியை உலுக்கி வரும் காற்று மாசு குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு இன்று (நவ.,17) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ரமணா கூறியதாவது: விவசாயிகளை தண்டிக்க நாங்கள் விரும்பவில்லை. குறைந்தபட்சம் ஒரு வாரமாவது கழிவுகளை எரிக்க வேண்டாம் என மத்திய அரசு விவசாயிகளிடம் கோரிக்கை வைக்க வேண்டும். டி.வி சேனல்களில் நடைபெறும் விவாதங்களே அதிக மாசுபாட்டை உருவாக்குகின்றன.


latest tamil news


டில்லியில் நட்சத்திர ஓட்டல்களில் அமர்ந்துக்கொண்டு, விவசாயிகள் கழிவுகளை எரிப்பதால் அதிக மாசு ஏற்படுவதாக பேசுவது வேதனையானது. வழக்கில் உள்ள தரப்பினர் பிரச்னையை திசை திருப்ப முயற்சிக்காத பட்சத்தில், மாசுபாட்டைக் குறைப்பதில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். நீங்கள் ஒரு பொதுப் பதவியை வகிக்கும் போது நீங்கள் அத்தகைய விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும். மனசாட்சி தெளிவாக இருந்தால் பிரச்னை இல்லை. இவ்வாறு அவர் கூறினார். இந்த வழக்கு நவ.,23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X