பொது செய்தி

இந்தியா

பறக்கும் விமானத்தில் உடல்நலம் இழந்த பயணி: டாக்டராக மாறி சிகிச்சை அளித்த மத்திய அமைச்சர்

Updated : நவ 17, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
புதுடில்லி: டில்லியில் இருந்து மும்பைக்கு கிளம்பிய விமானத்தில் பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது, விமானத்தில் இருந்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் டாக்டர் பகவத் காரத், சிகிச்சை அளித்து உதவினார்.மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருப்பவர் டாக்டர் பகவத் காரத். டாக்டரான இவர், ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி ஏற்பதற்கு முன்னர் மஹாராஷ்டிரா மாநிலத்தில்
Doctor,Union Minister, Help, Passenger, Mid-Air,Dr Bhagwat Karad, Minister,  Finance, IndiGo flight, Delhi,Mumbai  giddiness

புதுடில்லி: டில்லியில் இருந்து மும்பைக்கு கிளம்பிய விமானத்தில் பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது, விமானத்தில் இருந்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் டாக்டர் பகவத் காரத், சிகிச்சை அளித்து உதவினார்.

மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருப்பவர் டாக்டர் பகவத் காரத். டாக்டரான இவர், ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி ஏற்பதற்கு முன்னர் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் மேயராகவும் பதவி வகித்துள்ளார். டாக்டர் துறையில் பல்வேறு அனுபவங்களை பெற்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று(நவ.,16) தலைநகர் டில்லியில் இருந்து தனியார் விமானத்தில் மும்பைக்கு சென்றார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, 45 வயதான பயணி ஒருவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. அது குறித்து தகவல் அறிந்த விமான பணிப்பெண்கள், சக பயணிகளின் உதவியை நாடினர்.

இதனையடுத்து, பகவத் காரத் உடனடியாக அந்த நபருக்கு சிகிச்சை அளித்தார். அந்த பயணிக்கு குளுக்கோஸ் அளித்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மும்பை சென்றடைந்ததும், அந்த பயணிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.


latest tamil news


இது தொடர்பாக பகவத் காரத் கூறுகையில், அந்த பயணிக்கு தொடர் வியர்வை ஏற்பட்டதுடன், ரத்த அழுத்தம் குறைந்தது. உடனடியாக குளுக்கோஸ் செலுத்தப்பட்டதும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சரின் இந்த செயலுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr SS - Chennai,இந்தியா
22-நவ-202111:49:00 IST Report Abuse
Dr SS சர்க்கரை நோயாளிகள் பயணம் செய்யும்போது இனிப்பு உணவுகளை கைவசம் வைத்திருக்கவேண்டும். மயக்கம் வருவதை அல்லது வியர்வை அதிகமாவதை வரும்போது இனிப்புகளை தாமதம் இல்லாமல் உட்க்கொள்ளவேண்டும். சர்க்கரை அளவு அதிகம் அனால் தவறில்லை
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
17-நவ-202121:40:33 IST Report Abuse
Vijay D Ratnam நம்ம தமிழக ஹெல்த் மினிஸ்டர் ஓப்பன் யுனிவர்சிட்டியில் டென்த் பாஸ் பண்ணிட்டு டிகிரி வாங்கியதாக படித்த ஞாபகம். பாண்டிச்சேரி முன்னாள் கல்வி மந்திரி விழுப்புரத்தில் டென்த் பரிட்சை எழுத ஆள்மாறாட்டம் நடத்திய போது கையும் களவுமாக சிக்கி சின்னாபின்னமாகி மந்திரி பதவி போயி நடுத்தெருவில் நின்றார். எதுக்கு ஓப்பன் யுனிவர்சிட்டி. மூணாங்கிளாஸ் படிச்சிருந்தா ஹெல்த் மினிஸ்டர் ஆக முடியாதா என்ன.
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
17-நவ-202120:02:32 IST Report Abuse
spr இவரைப் பாராட்டுவோம் இனிமேலாவது மருத்துவம் மட்டுமல்ல வேறெதுவும் படிக்காத அரசியல்வியாதிகளுக்கும் இதர "அறிவு ஜீவிகளுக்கும்" டாக்டர் பட்டம் கொடுத்து அதன் மகத்துவத்தைக் குறைக்காமல் இருந்தால் சரி அவர்களுக்கு கொடுக்கத்தான் வேண்டுமென்றால் வேறு ஏதேனும் பட்டம் கொடுக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X