சொல்லாமல் விடைபெற்றதற்கு மன்னியுங்கள்: சக நீதிபதிகளுக்கு சஞ்சிப் பானர்ஜி கடிதம்

Updated : நவ 17, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (34)
Advertisement
சென்னை: '' தனிப்பட்ட முறையில் உங்களிடம் சொல்லாமல் விடைபெற்றதற்காக மன்னியுங்கள்'' என மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றத்திற்கு மாற்றப்பட்ட தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தெரிவித்துள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி, மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து அவர், இன்று சென்னையில் இருந்து கிளம்பி
chennai high court, justice, sanjib banerjee, judge,

சென்னை: '' தனிப்பட்ட முறையில் உங்களிடம் சொல்லாமல் விடைபெற்றதற்காக மன்னியுங்கள்'' என மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றத்திற்கு மாற்றப்பட்ட தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி, மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து அவர், இன்று சென்னையில் இருந்து கிளம்பி சென்றார். பிரிவு உபசார விழாவிலும் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், சக நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு சஞ்ஜிப் பானர்ஜி எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: தனிப்பட்ட முறையில் உங்களிடம் சொல்லாமல் விடைபெற்றதற்கு மன்னியுங்கள். நாட்டிலேயே சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தான் சிறப்பானவர்கள். என்னுடைய நடவடிக்கை புண்படுத்தி இருந்தால், அது தனிப்பட்ட முறையிலானது அல்ல, நீதித்துறைக்காக.

மன்னித்து விடுங்கள் சஞ்சீவ் பானர்ஜி உருக்கமான கடிதம் | Sanjeev Banerjee | High court Judge | Chennai | Dinamalar |


latest tamil news


என் மீதான உங்களின் அன்பினால் பூரித்து போயிருக்கிறேன். திறமையான நிர்வாகத்தை மேற்கொள்ள உதவியாக இருந்த பதிவுத்துறைக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். சொந்த மாநிலம் என தமிழகத்தை 11 மாதங்களாக சொல்லிக்கொண்டிருந்த மகிழ்ச்சியிலேயே விடைபெறுகிறேன். ஆதிக்க கலாசாரத்தில் பணியாற்றி கொண்டிருக்கிறீர்கள். அதனை என்னால் முழுமையாக தகர்த்து எறிய முடியவில்லை. இவ்வாறு அந்த கடிதத்தில் சஞ்சிப் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Unmai Vilambi - California,யூ.எஸ்.ஏ
17-நவ-202123:49:53 IST Report Abuse
Unmai Vilambi He was giving readings in favour of DMK. So, a big 'aappu' He cannot comment about 'aathikka kalaachaaram' He was questioning about EWS quota to poor students in MBBS seat but passed 10.5% reservation to Vaniyars without any hesitation He dumped the request to temples when everything else was ed (cinema theatre, mall, etc.). He was acting in favour of DMK and hence this transfer Good riddance
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
17-நவ-202122:46:10 IST Report Abuse
R. Vidya Sagar நீதித்துறையில் வெளிப்படைத்தன்மை இல்லை. ஊருக்குத்தான் உபதேசம்
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
17-நவ-202122:16:09 IST Report Abuse
RajanRajan ஆதிக்க கலாசாரத்தில் பணியாற்றி கொண்டிருக்கிறீர்கள். அதனை என்னால் முழுமையாக தகர்த்து எறிய முடியவில்லை. சத்தியம் என்ற ஒரே அஸ்திரத்தை வைத்து பணியாற்ற வேண்டிய பதவி இந்த நீதிபதி பதவி. இங்கு எல்லோருக்கும் அந்த தகுதி வந்து விடாது அத்தனை எளிதானதுமல்ல. இவர்களின் கர்மம் என்பது வம்சம் பரம்பரை சார்ந்ததாக அமையும் என்பது இயற்கையின் நியதி. ஆனால் இன்றைய நிலைப்பாடுகள் எப்படி என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. சட்டம் கட்டம் என எல்லாவற்றிக்கும் அப்பாற்பட்ட இயற்கையின் நியதி படி செயலாற்ற வேண்டியவர்கள் இந்த நீதிபதிகள். இங்கு ஆசா பாசம் பந்தங்களுக்கு இடமே இல்லை. எனவே ஆதிக்கம் என்பது இயற்கை சார்ந்த ஒரு கட்டுக்கோப்பு என்பதை ஒவ்வொரு நீதிபதியும் புரிந்து செயலாற்ற வேண்டிய துறை இந்த நீதித்துறை என்பதில் ஐயமே இல்லை. இது ஒவ்வோவோர் வக்கீல்களுக்கும் பொருந்தும். வாழ்த்துக்கள். ஜெய் ஸ்ரீராம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X