சென்னை: '' தனிப்பட்ட முறையில் உங்களிடம் சொல்லாமல் விடைபெற்றதற்காக மன்னியுங்கள்'' என மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றத்திற்கு மாற்றப்பட்ட தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி, மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து அவர், இன்று சென்னையில் இருந்து கிளம்பி சென்றார். பிரிவு உபசார விழாவிலும் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், சக நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு சஞ்ஜிப் பானர்ஜி எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: தனிப்பட்ட முறையில் உங்களிடம் சொல்லாமல் விடைபெற்றதற்கு மன்னியுங்கள். நாட்டிலேயே சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தான் சிறப்பானவர்கள். என்னுடைய நடவடிக்கை புண்படுத்தி இருந்தால், அது தனிப்பட்ட முறையிலானது அல்ல, நீதித்துறைக்காக.

என் மீதான உங்களின் அன்பினால் பூரித்து போயிருக்கிறேன். திறமையான நிர்வாகத்தை மேற்கொள்ள உதவியாக இருந்த பதிவுத்துறைக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். சொந்த மாநிலம் என தமிழகத்தை 11 மாதங்களாக சொல்லிக்கொண்டிருந்த மகிழ்ச்சியிலேயே விடைபெறுகிறேன். ஆதிக்க கலாசாரத்தில் பணியாற்றி கொண்டிருக்கிறீர்கள். அதனை என்னால் முழுமையாக தகர்த்து எறிய முடியவில்லை. இவ்வாறு அந்த கடிதத்தில் சஞ்சிப் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE