பொது செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் பொருள் பயன்பாடு தாராளம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் அரசினால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாலிதீன் கவர்கள் தங்குதடையின்றி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் சுற்றுப்புற சூழலை கருத்தில் கொண்டு கேரிபேக் உள்ளிட்ட, 14 வகையான பிளாஸ்டிக் பாலிதீன் பொருட்களுக்கு மாநில அரசு தடை செய்துள்ளது. அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி பகுதிகளில் உள்ள டீ கடைகள்,

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் அரசினால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாலிதீன் கவர்கள் தங்குதடையின்றி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் சுற்றுப்புற சூழலை கருத்தில் கொண்டு கேரிபேக் உள்ளிட்ட, 14 வகையான பிளாஸ்டிக் பாலிதீன் பொருட்களுக்கு மாநில அரசு தடை செய்துள்ளது. அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி பகுதிகளில் உள்ள டீ கடைகள், ஓட்டல்கள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களுக்கு பார்சல்கள் கொடுப்பதற்கு தடை செய்யப்பட்ட பாலிதீன் கவர்களையே பயன்படுத்துகின்றனர். அரசின் தடை உத்தரவு அமலுக்கு வந்தும் அப்பொருள்களின் பயன்பாடு குறைந்தபாடில்லை. சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் பெயரளவில், 'நகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாலிதீன் பொருட்களை பயன்படுத்தக்கூடாது' என்று கூறி சென்றதுடன் கண்டுகொள்ளவில்லை.மீண்டும் அப்பொருட்கள் பயன்படுத்தபடுகிறதா என்ற ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாலிதீன் பயன்பாடு குறையவில்லை. அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X