பொது செய்தி

தமிழ்நாடு

பாலம் அமைக்க கோரி மாணவியர், மக்கள் மறியல்

Added : நவ 17, 2021
Share
Advertisement
குளித்தலை: குளித்தலை அடுத்த, கல்லடை பஞ்., டி.இடையபட்டி ரெங்கநாதபுரம் பகுதியில் தனியார் மகளிர் கல்லூரி உள்ளது. அழகனாம்பட்டி சாலையில் கல்லூரி அருகே ஆற்றுவாரி கடந்து செல்கிறது. மழைநீர் சென்றால் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவியர், 10 கி.மீ., தூரம் சென்று வரும் நிலை உள்ளது. ஆற்றுவாரியில் உயர் மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

குளித்தலை: குளித்தலை அடுத்த, கல்லடை பஞ்., டி.இடையபட்டி ரெங்கநாதபுரம் பகுதியில் தனியார் மகளிர் கல்லூரி உள்ளது. அழகனாம்பட்டி சாலையில் கல்லூரி அருகே ஆற்றுவாரி கடந்து செல்கிறது. மழைநீர் சென்றால் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவியர், 10 கி.மீ., தூரம் சென்று வரும் நிலை உள்ளது. ஆற்றுவாரியில் உயர் மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் ஆற்றுவாரியில், 5 அடிக்கும் மேல் மழைநீர் செல்கிறது. மாணவியரும், பொதுமக்களும் ஆற்றுவாரியை கடந்து செல்வதில் சிரமப்படுகின்றனர். இதையடுத்து, ஆற்றுவாரியில் மேல்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, அழகனாம்பட்டி பஸ் நிறுத்தத்தில் மாணவியரும் பொதுமக்களும் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., ஸ்ரீதர், தாசில்தார் விஜயா, யூனியன் கமிஷினர் சரவணன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர். மறியல் பேராட்டத்தால் திருச்சி- தோகைமலை சாலையில் காலை, 8:30 மணியிலிருந்து, 10:00 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X