மழைநீர் வடிகால் வசதி வேண்டும்| Dinamalar

மழைநீர் வடிகால் வசதி வேண்டும்

Added : நவ 17, 2021
Share
கரூர்: கரூர் அருகே, மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் அடுத்த, மருத்துவநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால், போதிய மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால், மழைக் காலங்களில் தண்ணீர் சாலையில் தேங்கிய நிலையில் இருக்கும். இதனால், டூ வீலர்களில் கூட செல்ல முடியாமல் சேறும், சகதியுமாக இருக்கும். இதுகுறித்து

கரூர்: கரூர் அருகே, மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் அடுத்த, மருத்துவநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால், போதிய மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால், மழைக் காலங்களில் தண்ணீர் சாலையில் தேங்கிய நிலையில் இருக்கும். இதனால், டூ வீலர்களில் கூட செல்ல முடியாமல் சேறும், சகதியுமாக இருக்கும். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை. இதனால் மருத்துவ நகர் பகுதிகளில் வடிகால் வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X