பஸ் ஸ்டாண்டுக்குள் வராத பஸ்களால் தவிப்பு| Dinamalar

பஸ் ஸ்டாண்டுக்குள் வராத பஸ்களால் தவிப்பு

Added : நவ 17, 2021
Share
கரூர்: அரவக்குறிச்சி பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லாமல் பெரும்பாலான பஸ்கள் நேரிடையாக செல்வதால், பயணிகள் அவதிப்படுகின்றனர். கரூரில் இருந்து திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் மற்றும் அரசு பஸ்கள், அரவக்குறிச்சி பஸ் ஸ்டாண்டுக்கு செல்வதில்லை. மாறாக கடைவீதியில் பஸ்களை நிறுத்தி விட்டு, பயணிகளை இறக்கி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் பஸ்

கரூர்: அரவக்குறிச்சி பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லாமல் பெரும்பாலான பஸ்கள் நேரிடையாக செல்வதால், பயணிகள் அவதிப்படுகின்றனர். கரூரில் இருந்து திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் மற்றும் அரசு பஸ்கள், அரவக்குறிச்சி பஸ் ஸ்டாண்டுக்கு செல்வதில்லை. மாறாக கடைவீதியில் பஸ்களை நிறுத்தி விட்டு, பயணிகளை இறக்கி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் பஸ் ஸ்டாண்டுக்குள் காத்திருக்கும் பயணிகள் ஏமாற்றமடைகின்றனர். இதனால், அரவக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன், பஞ்., யூனியன் அலுவலகம், டவுன் பஞ்., அலுவலகம், தொடக்க கல்வி அலுவலகங்களுக்கு செல்ல பொதுமக்கள் இரண்டு கி.மீ., தூரம் வரை நடந்து செல்ல வேண்டியுள்ளது. மேலும், பாவாநகர், கேர்நகர், அய்யாவு நகர், பொன் நகர், ஜீவா நகர் உள்ளிட்ட பகுதியில் வசித்து வரும் மக்களும், கடைவீதியில் பஸ்கள் நிறுத்தப்படுவதால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பஸ் ஸ்டாண்டுக்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்லும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X