விபத்து அவசர சிகிச்சை பிரிவு அமைக்க மக்கள் கோரிக்கை

Added : நவ 17, 2021
Share
Advertisement
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரவக்குறிச்சி தாலுகாவாக அறிவிக்கப்பட்ட பின்பு அங்கு செயல்பட்டுக்கொண்டிருந்த, அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு, 34 படுக்கை வசதிகளுடன் தற்போது இரண்டாம் தர பல் நோக்கு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இதில் உள்நோயாளிகள் பிரிவு,

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரவக்குறிச்சி தாலுகாவாக அறிவிக்கப்பட்ட பின்பு அங்கு செயல்பட்டுக்கொண்டிருந்த, அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு, 34 படுக்கை வசதிகளுடன் தற்போது இரண்டாம் தர பல் நோக்கு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இதில் உள்நோயாளிகள் பிரிவு, கர்ப்பிணிகளுக்கு, 24 மணி நேரமும் பிரசவம் பார்க்க கூடிய அறுவைச் சிகிச்சை அரங்கம்,பிரசவ வார்டு, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங், எக்ஸ்ரே மற்றும் குளிர்சாதன வசதியுடன் கூடிய பிணவறை, பிரேத பரிசோதனை கூடம் உள்ளிட்ட மருத்துவமனையாக நவீன மயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் சாலை மற்றும் தீ விபத்து நடைபெறும் சமயங்களில், படுகாயமடைவோர், அவசர சிகிச்சை பெற, அங்குள்ள அரசு மருத்துவமனையை அணுகும்போது போதிய வசதி இல்லாததால் பல கி.மீ., தொலைவிலுள்ள கரூரில் உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளை நாடவேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தீவிர விபத்து அவசர சிகிச்சை பிரிவு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X