இன்று கார்த்திகை முதல் நாள்; ஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று கார்த்திகை முதல் நாள்; ஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்

Added : நவ 17, 2021
Share
நாமக்கல்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு மலைக்கு செல்வது வழக்கம். இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் சபரிமலை செல்ல முடியாமல் காத்திருந்தனர். நடப்பாண்டு சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. தினசரி, 50 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் பதிவு செய்து

நாமக்கல்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு மலைக்கு செல்வது வழக்கம். இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் சபரிமலை செல்ல முடியாமல் காத்திருந்தனர். நடப்பாண்டு சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. தினசரி, 50 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் பதிவு செய்து சபரிமலைக்கு சென்று வரலாம். இரண்டு தவனை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள், 24 மணி நேரத்திற்கு முன் கொரோனா பரிசோதனை செய்து அந்த சான்றிதழுடன் சபரிமலைக்கு செல்லலாம். ஐயப்ப பக்தர்களுக்கு, நாமக்கல் ஐயப்பசாமி அறக்கட்டளை மூலம் நடப்பாண்டும் ஐயப்பன் கோவிலில் இன்று கார்த்திகை, 1ம் தேதி முதல் மாலை போடுதல், இருமுடி கட்டுதல் ஆகியவை தொடர்ந்து நடைபெறும். ஆன்லைன் புக்கிங் பெற்றவர்கள் மட்டும் மாலை அணிந்து, இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்லலாம் என, அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X